ஐ.பி.எல் பிக்சிங்: ஸ்ரீசாந்த், அஜித் சண்டிலா ஜாமின் மனுக்கள் தள்ளுபடி… ஜூன் 18 வரை திகார் சிறை

Subscribe to Oneindia Tamil

IPL spot-fixing live: Court rejects Sreesanth, Chandila’s bail pleas
டெல்லி: கிரிக்கெட் சூதாட்டப்புகாரில் கைது செய்யப்பட்டுள்ள கிரிக்கெட் வீரர்கள் ஸ்ரீசாந்த், அஜித் சண்டிலா ஆகியோரின் ஜாமின் மனுக்களை டெல்லி நீதிமன்றம் இன்று தள்ளுபடி செய்தது.

சூதாட்டப்புகாரில் கைது செய்யப்பட்ட ஸ்ரீசாந்த், அஜீத் சண்டிலா ஆகியோர் திகார் சிறையில் அடைக்கப்பட்டனர். இவர்கள் இருவரையும் நாளை வரை போலீஸ் காவலில் வைத்து விசாரிக்க அனுமதி கோரப்பட்டிருந்தது. அதற்கு நீதிமன்றம் அனுமதி மறுத்துவிட்டது.

இந்த நிலையில், அவர்களின் ஜாமின் மனுக்கள் மீதான விசாரணை இன்று நடைபெற்றது. ஸ்ரீசாந்த், அஜீத் சண்டிலா ஆகிய இருவரின் ஜாமின் மனுவும் தள்ளுபடி செய்த டெல்லி நீதிமன்றம், இருவரையும் ஜுன் 18ம் தேதி வரை நீதிமன்றக் காவலில் வைக்க உத்தரவிட்டுள்ளது.

அங்கீத் சவான் திருமணம்

இதனிடையே ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் மற்றொரு வீரர் அங்கீத் சவான் திருமணத்திற்காக கடந்த சில தினங்களுக்கு முன்பு ஜாமீன் பெற்றார். அவரது திருமணம் கடந்த 2ம் தேதி நடைபெற்று முடிந்துள்ள நிலையில் வரும் 6ம் தேதி அங்கீத் சவான் திகார் சிறைக்கு திரும்ப வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது. கிரிக்கெட் வீரர்கள் திருமணம் முடிந்த கையோடு ஹனிமூன் போவார்கள், அல்லது மேட்ச் விளையாடப் போவார்கள். ஆனால் அங்கீத் சவான் சிறைக்குப் போகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+