வெயிலுக்கு மருந்துகளும் தப்பலயாம்... ஏசி இல்லாம உருகுதாம்!!!
ஹைதராபாத்: ஆந்திரா முழுவதும் கொளுத்துகிற வெயிலுக்கு மருந்துக் கடைகளில் பிரிட்ஜில் வைக்கப்பட்டுள்ள மருந்துகள் கூட கூழாகிப் போய் கசிந்துருகி வருகிறதாம்.
கடுமையான வெப்ப நிலை ஒரு காரணமாக இருந்தாலும், ஓட்டை உடைசல் பிரிட்ஜுகள் மற்றும் மோசமான பராமரிப்பும் கூட இதற்குக் காரணம் என்கிறார்கள் நிபுணர்கள்.
மேலும் பல மருந்துக் கடைகள், மருந்து நிறுவனங்களில் பிரிட்ஜ் வசதி கூட இல்லாத நிலை காணப்படுகிறதாம். இதுவும் மருந்துகள் உருக இன்னொரு காரணமாம்.

அரசு இயந்திரமும் தப்பல...
ஆந்தி அரசு மருத்துவமனைகள் மற்றும் ஆந்திர மாநில சுகாதார அடிப்படைக் கட்டமைப்புக் கழகத்தின் கிட்டங்கிகள், மருந்து விற்பனை நிலையங்களிலும் கூட மருந்துகள் உருகிப் போய் வருகின்றனவாம்.

ரேனிட்டைடின்....
குறிப்பாக ரேனிட்டைடின் மருந்துகள்தான் அதிக அளவில் உருகிப் போய் விடுகின்றனவாம். இந்த மருந்து அசிடிட்டி காரணமாக ஏற்படும் வயிற்று வலிக்காக மக்கள் சாப்பிடுவதாகும்.

உருகும் மருந்துகள்...
அதிக அளவில் வெப்ப நிலை ஏர்பட்டால் இதுபோன்ற மருந்துகள் உருகிப் போய் விடும். இவை பெரும்பாலும் டியூப் மாத்திரைகள் ஆகும். இவற்றை முறையான சீதோஷ்ணத்தில் வைத்திருக்க வேண்டியது அவசியமாகும். ஆனால் பலர் இதில் அலட்சியம் காட்டுகின்றனராம். இந்த மாத்திரைகளில் செல்லுலோஸ்இழைகள் அதிகம் இருக்கும். இவை வெப்பநிலையில் உருகி, இளகிப் போய் விடும்.

பர்ஸ்ட் மாத்திரைய காப்பாத்துங்கப்பா...
இந்த அவல நிலை குறித்து மாநில சுகாதாரத்துறை கண்டு கொள்ளாமலேயே இருக்கிறதாம். இதைத் தடுக்கக்கூட நடவடிக்கை எதுவும் எடுக்கப்படுவதில்லையாம்.

பாவம் மக்கள்...
எனவே இந்த மாத்திரைகளை வாங்கும் மக்கள், அவற்றை வீரியம் குறைந்த, கிட்டத்தட்ட கெட்டுப் போன மாத்திரைகளாகவே வாங்கும் நிலைக்குத் தள்ளப்படுகின்றனர்.
-
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
கோவை விளாங்குறிச்சி - தண்ணீர் பந்தல் சந்திப்பு மொத்தமாக மாறுகிறது.. மக்களின் ஏக்கம் நிறைவேறுது -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
வைகை அணையை இப்படி ஒரு கோலத்தில் தேனி பார்த்தது இல்லை.. மீன்களே வாழ முடியாத நிலை -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
Ration Card: முடிவுக்கு வருகிறதா தாயுமானவர் திட்டம்..? ஜூலை முதல் ரேஷன் பொருட்கள் வீடு வீடாக வராது!












Click it and Unblock the Notifications