நகைக்கடை நடத்தி ரூ. 15 கோடி மோசடி செய்த அண்ணன் தம்பி தலைமறைவு
கோவை: கோவையில் நகைக்கடை நடத்தி ரூ.15 கோடி நகை மோசடி செய்ததாக அண்ணன் தம்பி மீது போலீசில் புகார் கொடுக்கப்பட்டுள்ளது.
கோவை, பெரிய கடை, ராஜா வீதி, காந்திபுரம், கிராஸ்கட் வீதியில், சொர்ணலட்சுமி, லாவண்யா என்ற நகைக்கடைகள் உள்ளன.
25 ஆண்டுகளாக இயங்கி வரும் இந்த கடைகளை அசோக்குமார், பாலாஜி ஆகியோர் நடத்தி வருகின்றனர். இவர்கள் இருவரும் அண்ணன் தம்பிகள்.
இந்த கடைகளுக்கு சுமார் 60க்கும் மேற்பட்ட நகை உற்பத்தியாளர்கள் நகையை சப்ளை செய்து வந்திருக்கின்றனர். தவிர பொதுமக்களிடமும் நகைச் சீட்டு நடத்தி, பணம் வசூலித்திருக்கிறார்கள்.
இந்நிலையில் கடந்த 2 நாட்களாக, லாவண்யா, சொர்ணலட்சுமி நகைக் கடைகள் திறக்கப்படவில்லை. இதையடுத்து, நகை உற்பத்தியாளர்கள், அசோக்குமார் மற்றும் பாலாஜி மீது போலீசில் புகார் தெரிவித்துள்ளனர்.
மக்களிடம் நகை சீட்டுக்காக வசூலிக்கப்பட்ட பணம் ரூ.2 கோடியும், நகை சப்ளை செய்ததற்காக உற்பத்தியாளர்கள் பணம் ரூ.15 கோடியும் தராமல் இருவரும் தலைமறைவாகி விட்டதாக அவர்கள் தெரிவித்துள்ளனர். இதையடுத்து தலைமறைவான அசோக்குமார், பாலாஜி ஆகியோரை போலீசார் தேடி வருகின்றனர்.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம்












Click it and Unblock the Notifications