For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

அட நாராயணா... இந்த சேரை மாத்தக் கூடாதாப்பா...!

Google Oneindia Tamil News

லண்டன்: வேலையை விட்டுப் போகும் நான்கு பேரில் 3 பேர் அலுவலக கட்டமைப்பை குறை கூறியே விலகுகிறார்களாம். குறிப்பாக சேர் சரியில்லை என்பதே பொதுவான புகாராக இருக்கிறதாம்.

அலுவலகங்களின் உட்கட்டமைப்பு குறித்த ஒரு சர்வேயை வெளியிட்டுள்ளது இங்கிலாந்தைச் சேர்ந்த அமைப்பு ஒன்று.

மோசமான சேர், பெஞ்ச், டேபிள் என பலரும் அலுவலக கட்டமைப்பை குறை கூறி வேலையை விட்டு விலகுகிறார்களாம்.

மேலும் இப்படிப்பட்ட மோசமான இருக்கைகள், டேபிள்கள் போன்றவற்றில் அமர்ந்து பணியாற்றுவதால் கழுத்து வலி, முதுகு வலி, கை வலி போன்றவை வருவதாகவும், இதனால் தேவையில்லாத மருத்துவச் செலவுகள் அதிகரிப்பதாகவும் புலம்புகிறார்கள் இவர்கள்.

ஆபீஸாய்யா இது...

ஆபீஸாய்யா இது...

வேலையை விட்டுப் போகும் நால்வரில் ஒருவர் ஆபீஸ் சூழலை கடுமையாக விமர்சிக்கிறார்களாம். உடம்பு வலிக்க வலிக்க ஏன் இந்த ஆபீஸில் வேலை பார்க்கனும் என்பது பலரின் புலம்பலாக உள்ளதாம்.

டென்ஷன் டென்ஷன் டென்ஷனப்பா

டென்ஷன் டென்ஷன் டென்ஷனப்பா

ஆபீஸில் தொற்றிக் கொள்ளும் டென்ஷன் வீட்டிலும் கூட தொடருவதாக பலரும் சொல்கின்றனர்.

சேரா இது...

சேரா இது...

அலுவலகங்களில் உள்ள பர்னிச்சர்கள் மீதுதான் பல ஊழியர்கள் கடுமையாக பாய்கிறார்கள். உட்கார வசதியே இல்லாத சேர், பெஞ்ச் என்று மூன்றில் இரண்டு பங்கு பேர் குமுறுகிறார்கள்.

முதுகு வலி, தலைவலி, மன அழுத்தம்

முதுகு வலி, தலைவலி, மன அழுத்தம்

இப்படிப்பட்ட ஓட்டை உடைசல் பர்னிச்சர்களால் தங்களுக்கு தலைவலி, முதுகுவலி, மன அழுத்தம் ஆகியவை ஏற்படுவதாக பத்தில் 7 பேர் சொல்கிறார்கள்.

2 வராம் லீவு கன்பார்ம்ட்...

2 வராம் லீவு கன்பார்ம்ட்...

இப்படிப்பட்ட இருக்கைகளில் உட்கார்ந்து வேலை பார்ப்பதால் வருடத்திற்கு 2 வாரம் வரை லீவு போட வேண்டிய நிலை ஏற்படுவதாக பத்தில் 5 பேர் சொல்கிறார்கள்.

இதுக்கு சும்மாவே இருக்கலாம்....

இதுக்கு சும்மாவே இருக்கலாம்....

20ல் ஒருவர், இப்படிப்பட்ட வேலையில் இருப்பதை விட பேசாமல் சும்மா இருக்கலாம் அல்லது வேறு வேலைக்குப் போகலாம் என்று கருத்து தெரிவித்துள்ளனர்.

பேனா.. பென்சில் கூட தராட்டி எப்பூடி....பாஸ்!

பேனா.. பென்சில் கூட தராட்டி எப்பூடி....பாஸ்!

பத்தில் நான்கு பேர், அலுவலகத்தில் தங்களுக்குத் தேவையான, பேனா, பென்சில், ஸ்கிரிப்ளிங் பேட் உள்ளிட்ட அடிப்படைப் பொருட்களைக் கூட சரியாக தருவதில்லை என்று புலம்பியுள்ளனர்.

சரியா சொன்னீங்கய்யா... எல்லா ஆபீஸும் இப்படித்தான் போல...!

English summary
Badly set up desks and chairs cost companies more than £7billion a year in sick pay, a study found. Half of all office workers say their workplace has made them ill and affected their home life. Nearly three-quarters say they suffer ill-health as a direct result of poorly equipped desks, with around two-thirds of those forced to take medication to manage their condition.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X