கடத்தல் கும்பலிடம் இருந்து மீண்ட லண்டன் தம்பதிகள் முதல்வர் ஜெயலிலதாவுக்கு நன்றி
சென்னை: கடத்தல் கும்பலிடம் சிக்கி மீண்ட, லண்டன் தொழில் அதிபர் தம்பதிகள், சென்னையில் தமிழக முதல்வர் ஜெயலலிதாவை சந்தித்து நன்றி தெரிவித்துக் கொண்டனர்.
இலங்கையைச் சேர்ந்த தொழில் அதிபர் கணபதி பிள்ளை தவராஜா. இவர் தனது மனைவி ஜலஜா, மற்றும் மகளுடன் லண்டனில் வசித்து வருகிறார். இவர்கள், கடந்த மே 29 ம் தேதி சென்னை விமான நிலையத்தில் வந்து இறங்கிய போது, மர்ம நபர்களால் கடத்தி செல்லப்பட்டனர்.

பின்பு, இவர்களை விடுதலை செய்ய வேண்டும் எனில் ரூ.1கோடி தர வேண்டும் என, லண்டனில் உள்ள அவரது மகள் தர்ஷினியிடம் தொலைபேசி மூலம் மர்ம நபர்கள் மிரட்டல் விடுத்தனர்.
இதனால், அதிர்ச்சி அடைந்த தர்ஷினி இந்த சம்பவம் குறித்து, தமிழ்நாடு காவல்துறைக்கு தகவல் தெரிவித்தார். அதன் பேரில், காவல் துறை கூடுதல் ஆணையர் தாமரைக்கண்ணன் மற்றும் இணை ஆணையர் சண்முகவேல் ஆகியோர் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டடது.
இந்த தனிப்படை போலீசார், அதிரடி நடவடிக்கையில் இறங்கினர். அதன் பேரில், கடலூர் மாவட்டம் நெய்வேலியில் உள்ள மந்தாரக்குப்பத்தில் லண்டன் வாழ் இலங்கை தம்பதியரை போலீசார் மீட்டனர். மேலும், கடத்தல்காரர்களில் சத்யா என்பவரைத் தவிர மற்ற அனைவரும் கைது செய்யப்பட்டு சென்னைக்கு அழைத்துவரப்பட்டனர்.
இந்த நிலையில், கடத்தல் கும்பலால் கடத்தப்பட்டு போலீசாரால் மீட்கப்பட்ட, லண்டன் தொழிலதிபர் கணபதி பிள்ளை தம்பதிகள் நேற்று தலைமைச் செயலகத்தில் முதல்வர் ஜெயலிலதாவை நேரில் சந்தித்து , தங்களை மீட்க உதவியதற்கு நன்றி தெரிவித்துக் கொண்டனர்.
தமிழ்நாட்டு போலீஸ் பெஸ்ட்
அவர்களின் நன்றிக்கு பதில் கூறிய முதல்வர் ஜெயலலிதா, தமிழ்நாட்டு போலீஸ் படை எப்போதுமே சிறந்தது. இந்தியாவிலேயே சிறந்ததான தமிழ்நாடு போலீஸ் டீம் ஸ்காட்லாந்து யார்டு போலீஸ்க்கு இணையானது என்று பெருமிதத்துடன் கூறினார்.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள்












Click it and Unblock the Notifications