எங்கெங்கு காணினும் மோடி... கோவாவைக் கலக்கும் மோடி ஆதரவாளர்கள்
பனாஜி: கோவாவில் நடைபெறுவது பாஜக தேசிய செயற்குழுக் கூட்டமா அல்லது நரேந்திர மோடி ஆதரவாளர்கள் கூட்டமா என்றுசந்தேகம் வரும் அளவுக்கு எங்கு பார்த்தாலும் நரேந்திர மோடியின் போஸ்டராகவும், கட் அவுட்டாகவும் உள்ளது.
கோவாவில் தேசிய பாஜக செயற்குழு கூடியுள்ளது. இந்தக் கூட்டத்தில் இன்று நரேந்திர மோடிக்கு தேசிய பிரசாரக் குழுத் தலைவர் பதவியை அளிக்கும் முடிவை அறிவிக்கவுள்ளதாக பரபரப்புடன் எதிர்பார்க்கப்படுகிறது.
இந்தக் கூட்டத்தை அத்வானி புறக்கணித்து விட்டார். இதைக் கண்டித்து மோடி ஆதரவாளர்கள் அத்வானி வீட்டை முற்றுகையிட்டு மேலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளனர்.

மோடிமயமான கோவா
இந்த நிலையில் கோவா முழுவதும் நரேந்திரமோடியின் போஸ்டர்களாகவே உள்ளது.

32 கிலோமீட்டர் தூரத்திற்கு மோடிதான்
டபோலிம் விமான நிலையத்திலிருந்து கூட்டம் நடைபெறும் வடக்கு கோவா மரியாட் ரிசார்ட் வரை 32 கிலோமீட்டர் தொலைவுக்கு எங்கு பார்த்தாலும் மோடி படம்தான்.

53 போஸ்டர்கள்
இந்த தொலைவு முழுவதும் சரியாக 53 நரேந்திரமோடி போஸ்டர்கள் வைக்கப்பட்டுள்ளன.

தலைவருக்கு 25தான்
கட்சித் தலைவர் ராஜ்நாத் சிங்குக்கு 25 போஸ்டர்களைத்தான் பாஜகவினர் வைத்துள்ளனர்.

அத்வானியைக் காணோம்
இந்த போஸ்டர்களில் அத்வானியைக் காண முடியவில்லை. 10 போஸ்டர்களில்தான் அத்வானிமுகம் தெரிகிறது.

கோவா முதல்வருக்கு 10
கோவா முதல்வர் மனோகர் பாரிக்கருக்கு 10 போஸ்டர்களை வைத்துள்ளனர். அதேபோல சுஷ்மா சுவராஜ் 8 போஸ்டர்களில் காணப்படுகிறார். மத்தியப் பிரதேச முதல்வர் சிவராஜ் செளகானுக்கு 5 போஸ்டர்களில் இடம் கிடைத்துள்ளது.












Click it and Unblock the Notifications