பாஜக பிரசாரக் குழுத் தலைவராக மோடி நியமனம் -அத்வானி இன்றும் 'ஆப்சென்ட்'
பனாஜி: குஜராத் முதல்வர் நரேந்திரமோடி, பாஜகவின் தேசிய பிரசாரக் குழுவின் தலைவராக இன்று முறைப்படி அறிவிக்கப்பட்டார்.
பாஜக தேர்தல் திட்ட வகுப்புக் கமிட்டியின் தலைவராக மோடி நியமிக்கப்படுவதாக இன்று கோவாவில் நடந்த பாஜக தேசிய செயற்குழுக்கூட்டத்தின் போது பாஜக தலைவர் ராஜ்நாத் சிங் அறிவித்தார்.
இந்த அறிவிப்பை ராஜ்நாத் சிங் வெளியிட்டதும் கிட்டத்தட்ட 10 நிமிடங்களுக்கு கைத்தட்டல் நீடித்ததாம்.

இந்த அறிவிப்பின் மூலம் தேசிய அரங்குக்குள் மோடி நுழைகிறார். முன்னதாக மோடியை இப்பதவிக்கு வர விடாமல் தடுக்க அத்வானி கோஷ்டி கடுமையாக முயன்றது என்பது நினைவிருக்கலாம். அத்வானி கூட்டத்திற்கே வராமல் புறக்கணிப்பு செய்தார் என்பதும் முக்கியமானது.
புதிய பதவியின் மூலம் தேசிய அளவிலும் மாநிலஅளவிலும் நடைபெறும் தேர்தல்களில் மோடி தலைமையிலான பிரசாரக் குழு திட்டமிடலை மேற்கொள்ளும். அதாவது இனிவரும் தேர்தல்களை மோடி தலைமையில்தான் பாஜக சந்திக்கப் போகிறது.
முன்னதாக மோடிக்கு எதிராக திடீரென திரும்பிய அத்வானி, கோவா தேசிய செயற்குழுக் கூட்டத்தின் 2நாள் நிகழ்விலும் பங்கேற்கவில்லை. பாஜக தொடங்கப்பட்ட பிறகு அவர் முதல் முறையாக இப்போதுதான் தேசிய செயற்குழுக் கூட்டத்தில் கலந்து கொள்ளாமல் புறக்கணித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இன்றைய கூட்டத்தின்போது மோடி அறிவிப்பை ராஜ்நாத் சிங் அறிவித்தபோது அவருக்கு அருகே அமர்ந்திருந்த அத்வானியின் முக்கிய சிஷ்யர்களில் ஒருவரான சுஷ்மா சுவராஜ் இறுகிய முகத்துடன் காணப்பட்டார். மேலும், மோடி நியமனத்தை வரவேற்று தொடர்ந்து கைத்தட்டல் நீடித்தபோதும் சுஷ்மாவின் முகத்தில் ஈயாடவில்லை.
முன்னதாக மோடி நியமனத்தை வெளியிட்டு ராஜ்நாத் சிங்கூறுகையில், ஒவ்வொரு கட்சிக்கும் தேர்தல் என்பதுமிகப் பெரிய சவால். இந்த நிலையில், குஜராத் முதல்வர் நரேந்திரமோடியை, பாஜக தேசிய பிரசாரக் கமிட்டியின் தலைவராக நியமிக்கிறேன் என்று அறிவித்தார்.
இதற்கிடையே, அத்வானி கூட்டத்தில் பங்கேற்காதநிலையில் மோடி அறிவிப்பை வெளியிடலாமா, வேண்டாமா என்ற குழப்பத்தில் இன்று காலை வரை ராஜ்நாத் சிங் இருந்ததாக கூறுகிறார்கள். இருப்பினும் பாஜகவுக்கு அருளாசி புரிந்து வரும் ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் தலைமையிடமிருந்து பச்சைக்கொடி வந்ததைத் தொடர்ந்து மோடி அறிவிப்பை வெளியிட முடிவு செய்தார் ராஜ்நாத் சிங் என்று கூறப்படுகிறது.
-
பாஜகவை விட்டு விலகிய முன்னாள் MP நரசிம்மன்.. அண்ணாமலை பேச்சை கேட்டிருந்தா இந்நேரம் பாஜக ஆட்சியாம்! -
யூடியூபர் முக்தார் கைது.. அலிசா அப்துல்லா புகாரில் தலைமறைவாக இருந்தவர் மைசூரில் பிடிபட்டார் -
ரஜினிகாந்த் மருமகன் விசாகன்.. அண்ணாமலையின் ‘வி தி லீடர்ஸ்’ இயக்கத்தில் இணையப் போகிறார்? ட்விஸ்ட் -
இனி அரசு ஊழியர்களுக்கு வாரம் 2 நாள் விடுமுறை.. அனைத்து சனிக்கிழமையும் ‘லீவு’ அறிவித்த முதல்வர் -
ராயல் என்பீல்டு முதலீடு ஆந்திரா சென்றதா? அமைச்சர் கீர்த்தனா பற்றி உண்மையை உடைத்த MP மாணிக்கம் தாகூர் -
"அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவை பதவிநீக்கம் செய்ய வேண்டும்”.. முதல்வர் விஜய்க்கு கிருஷ்ணசாமி வைத்த கோரிக்கை -
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி -
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
"3 சேனல்கள் நீக்கம் இல்லை.. தொழில்நுட்ப கோளாறால் தற்காலிக ஒளிபரப்பு பாதிப்பு” - அமைச்சர் ராஜ்மோகன் -
முதல்வர் விஜய்யின் முதல் அரசு நிகழ்ச்சி.. ஒரே ஏஐ வீடியோவில் இத்தனை தமிழ்ப் பிழைகளா!












Click it and Unblock the Notifications