லஞ்சம் கேட்ட போலீசை சந்தேகத்தின் பேரில் துரத்திய போலீசார் : கோவையில் காமெடி
கோவை: லஞ்சம் கேட்ட வீடியோ பைரசி தடுப்பு பிரிவு போலீசாரை, டூப்ளிகேட் என்ற சந்தேகத்தில் பொதுமக்களோடு சேர்ந்து போலீசாரும் துரத்திய வேடிக்கை சம்பவம் நேற்று கோவையில் நடந்தது.
போத்தனூரை அடுத்த செட்டிபாளையத்தில், மொபைல் கடை வைத்திருப்பவர் தன்பிரசாத். நேற்று மதியம் 3:00 மணியளவில், இவரது கடைக்கு காரில் வந்த மூன்று பேர், தங்களை போலீஸ் என்று கூறி கடையை சோதனை செய்துள்ளனர். கடையில் ஆபாச படங்கள் டவுன்லோடு செய்து விற்பதாக வந்த ரகசியத்தகவலின் பேரில் சோதனைக்கு வந்துள்ளதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.
தன்ராஜ் அக்குற்றச்சாட்டினை மறுத்தபோதும், காரில் வந்த நபர், " உன் மீது வழக்கு போடாமல் இருக்க, ரூ.30 ஆயிரம் பணத்துடன் வெள்ளலூருக்கு வா' என மிரட்டிச் சென்றுள்ளார். பயந்து போன தன்ராஜும் அவர் கூறிய படியே, ரூ.30 ஆயிரம் பணத்துடன் வெள்ளலூர் புறப்பட்டுள்ளார்.
ரெய்டு வந்தவர்கள் மீது சந்தேகம் கொண்ட தன்ராஜின் நண்பர்கள், "யாரோ ஒரு மர்ம நபர், போலீஸ் என்று மிரட்டி, பணம் பறிக்க முயற்சிக்கிறார்' என, செட்டிபாளையம் போலீசாரிடம் புகார் அளித்தனர்.
புகாரின் அடிப்படையில் நடவடிக்கையில் இறங்கிய போலீசார், உடனடியாக கட்டுப்பாட்டு அறைக்கு இத்தகவலை தெரிவித்து உஷார் படுத்தினர். கட்டுப்பாட்டு அறையில் இருந்த போலீசார், கேட்டுக் கொண்டதற்கிணங்க, கிணத்துக்கடவு போலீஸ் இன்ஸ்பெக்டர் தங்கராஜு போலீஸ் படையுடன், சூலூர் நடுப்பாளையத்துக்கு விரைந்தார்.
இன்ஸ்பெக்டர் தங்கராஜூடன் செட்டிபாளையத்தை சேர்ந்த பொதுமக்கள் சிலரும், இரு சக்கர வாகனங்கள், கார்களில் உடன் சென்றனர். தன்ராஜிடம் பணம் கேட்ட நபரும் தனது இருப்பிடத்தை மாற்றி மாற்றி தெரிவித்துக் கொண்டே இருந்தார். இறுதியாக, ராமநாதபுரத்தில் வைத்து அவரை போலீசார் மடக்கிப் பிடித்தனர்.
பொதுமக்கள் சுற்றி வளைக்க , வாகனத்தில் இருந்த நபரை அரெஸ்ட் செய்ய நெருங்கிய இன்ஸ்பெக்டர் அதிர்ச்சியில் சிலையாகி விட்டாராம். காரணம் காரிலிருந்தது, உண்மையிலேயே வீடியோ பைரசி தடுப்பு போலீஸ் பிரிவு இன்ஸ்பெக்டரான சண்முகையா. அவருடன், இரு போலீசாரும் இருந்தனர்.
பின்னர் தன்பிரசாத்தை பொது மக்களும், போலீசாரும் சேர்ந்து சண்முகைய்யாவுடன் விசாரணைக்காக அனுப்பி வைத்து விட்டு கலைந்து சென்றனர். திரைப்படத்தில் வரும் சேஸிங் சீன் போல இச்சம்பவத்தால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.
-
பனை விவசாயியை எஸ்.ஐ இசக்கிராஜா சுட்ட வழக்கு.. சிபிசிஐடி விசாரணைக்கு ஐகோர்ட் உத்தரவு! -
திருப்பூர் மாநகராட்சி ஆபீஸில் அரசு அதிகாரிக்கு நம்பவே முடியாத மிகப்பெரிய பரிசு.. சரியான பாடம் -
இனி அரசு ஊழியர்களுக்கு வாரம் 2 நாள் விடுமுறை.. அனைத்து சனிக்கிழமையும் ‘லீவு’ அறிவித்த முதல்வர் -
ராயல் என்பீல்டு முதலீடு ஆந்திரா சென்றதா? அமைச்சர் கீர்த்தனா பற்றி உண்மையை உடைத்த MP மாணிக்கம் தாகூர் -
"அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவை பதவிநீக்கம் செய்ய வேண்டும்”.. முதல்வர் விஜய்க்கு கிருஷ்ணசாமி வைத்த கோரிக்கை -
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி -
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
"3 சேனல்கள் நீக்கம் இல்லை.. தொழில்நுட்ப கோளாறால் தற்காலிக ஒளிபரப்பு பாதிப்பு” - அமைச்சர் ராஜ்மோகன் -
முதல்வர் விஜய்யின் முதல் அரசு நிகழ்ச்சி.. ஒரே ஏஐ வீடியோவில் இத்தனை தமிழ்ப் பிழைகளா! -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்?












Click it and Unblock the Notifications