மும்பை: மகளின் தோழியை பலாத்காரம் செய்த நபர் கைது
Subscribe to Oneindia Tamil
மும்பை: மும்பையில் தனது மகளின் தோழியை பாலியல் பலாத்காரம் செய்த 45 வயது நபரை போலீசார் கைது செய்துள்ளனர்.
இந்த அக்கிரமத்தைச் செய்த நபரின் பெயர் ராம்ரூப் ராம்தேவ் பாசி. இவர் ஒரு பெயிண்டர். பார்க் சைட் பகுதியில் வசித்து வருகிறார்.
ராம்தேவின் மகளை ஒரு வாரமாக காணவில்லை. இதனால் மகளைத் தேடி வந்தார். இந்த நிலையில் மகளின் 17 வயது தோழியை அழைத்து விசாரித்தார். பின்னர் பார்க்குக்குக் கூட்டிச் சென்று பாலியல்பலாத்காரம் செய்ததாக தெரிகிறது.
இந்த சம்பவம் நடந்தபோது, அந்த பார்க்கின் வாட்ச்மேன் அந்த காமக் கொடூரனை கையும் களவுமாக பிடித்து போலீஸில் ஒப்படைத்தார். இதனையடுத்து அந்த நபரைக் கைது செய்து போலீஸார் கற்பழிப்பு வழக்கு போட்டுள்ளனர்.












Click it and Unblock the Notifications