சோனியா சொன்னா விளக்குமாத்த எடுத்து... அமைச்சரின் புளகாங்கித பேச்சு!

மஹந்த்தின் இந்தப் பேச்சு பலரையும் முகம் சுளிக்க வைத்துள்ளது. குறிப்பாக காங்கிரஸாரே இந்த ஜால்ராவின் சத்தம் தாங்க முடியாமல் சலசலப்படைந்துள்ளனராம்.
சட்டிஸ்கரைச் சேர்ந்த மஹந்த் மத்திய அமைச்சரவையில் துணை அமைச்சராக இருக்கிறார். சமீபத்தில் இவரை சட்டிஸ்கர் மாநில காங்கிரஸ் தலைவராக சோனியா காந்தி அறிவித்தார். இதனால் புல்லரித்துப் போய்க் கிடக்கிறார் மஹந்த்.
ஒரே நேரத்தில் இரண்டு பதவி என்பதால் அவருக்குத் தலை கால் புரியவில்லை. சோனியா காந்திக்கு எப்படி நன்றி கூறுவது என்று தெரியாமல் வாய்க்கு வந்ததையெல்லாம் சொல்லி புகழ்ந்து தள்ளுகிறார்.
சோனியா காந்தி குறித்து அவர் கூறுகையில், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி என்ன உத்தரவிட்டாலும் அதை நான் உடனே செய்வேன். ராகுல்ஜி சொன்னாலும் உடனே செய்வேன். அவர்கள் இட்ட கட்டளையை நிறைவேற்றுவதே எனது கடமை.
துடைப்பத்தை எடுத்து சட்டிஸ்கர் மாநில காங்கிரஸ் அலுவலகத்தைக் கூட்டிப் பெருக்கு என்று சொன்னாலும் உடனே செய்வேன். நிச்சயம் செய்வேன். எனக்கு அவர்கள் இடம் கட்டளைதான் முக்கியம் என்று புல்லரித்துச் சொல்லியுள்ளார் மஹந்த். இவருக்கு வயது 58 ஆகிறது.
ஜெயில் சிங் கூட இப்படித்தான்!
இப்படி காங்கிரஸ்காரர் ஒருவர் புல்லரித்து தாறுமாறாகப் பேசுவது இது முதல் முறையல்ல. முன்பு கியானி ஜெயில் சிங்கை குடியரசுத் தலைவர் வேட்பாளராக இந்திரா காந்தி அறிவித்தபோது கூட அவரும் இதே வார்த்தைகளைத்தான் உச்சரித்தார் என்பது பழைய கதை.
-
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
"முதலமைச்சருக்கு நன்றி.. ஆனால்! எதிரியின் எதிரி நண்பனா? விஜய் ரசிகர்கள் குறித்து பேசிய அஜித் சகோதரர் -
வீரமணி ஒரே போடு.. திருச்சியில் முதலமைச்சர் விஜய் பேசிய அந்த பேச்சால் மொத்த பேருக்கும் முகச்சுளிப்பு? -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம் -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
கோவையில் அருவியாக மாறிய மேம்பாலம் .. மேட்டுப்பாளையம் ஊட்டி செல்லும் வழியில் மாறிய காட்சி -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
அரசியல் மோதலை விடுங்க.. 'கலைஞர்' கருணாநிதி பிறந்தநாளுக்கு முதல்வர் விஜய் போட்ட பதிவு! -
விஜய்க்கு அரசு பாதுகாப்பு மேல நம்பிக்கை இல்லையா? தனி பாதுகாவலரோடு வருவது ஏன்? லாக் செய்த அதிமுக -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக












Click it and Unblock the Notifications