இப்படி தான் இந்தியாவோட பெயரை கெடுக்கணும்: மும்பை போலீஸை விளாசிய சுப்ரீம் கோர்ட்
டெல்லி: உகாண்டாவைச் சேர்ந்த எம்.பி. உள்பட 3 பேர் மீது ஆதாரமில்லாமல் வழக்குப் பதிவு செய்த மும்பை போலீசாரை உச்ச நீதிமன்றம் கண்டித்துள்ளது.
உகாண்டாவைச் சேர்ந்த எம்.பி., வழக்கறிஞர் மற்றும் தொழில் அதிபர் ஆகியோர் வியாபார பிரச்சனை ஒன்றை தீர்க்க இந்தியா வந்தனர். அவர்கள் தங்களை மிரட்டி பணம் பறித்ததாக இந்திய நிறுவனம் ஒன்று மும்பை போலீசில் புகார் கொடுத்தது. அந்த புகாரின்பேரில் வழக்குப் பதிவு செய்த போலீசார் உகாண்டா குடிமகன்கள் 3 பேரின் பாஸ்போர்ட்டுகளையும் பறிமுதல் செய்தனர்.
இந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம் மும்பை போலீசார் பதிவு செய்த முதல் தகவல் அறிக்கையை ரத்து செய்தது.
இது குறித்து நீதிமன்றம் கூறுகையில்,
சில போலீஸ் அதிகாரிகளால் தான் நம் நாட்டுக்கு கெட்ட பெயர். வெளிநாட்டவர்களின் உரிமைகளை பாதுகாக்காமல் அவர்கள் மீது மும்பை போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். அதுவும் அந்த குற்றச்சாட்டு ஆதாரமற்றது என்றது.












Click it and Unblock the Notifications