எஸ்.ஆர்.எம். குழுமத்தில் ஐடி துறையினர் ரூ.6.45 கோடி பறிமுதல்: அது வேற பணம்... பச்சமுத்து

பொறியியல், மருத்துவம், பல் மருத்துவம், மேலாண்மை கல்வி நிறுவனங்களை நடத்தி வரும் மற்றும் சினிமா தயாரிப்பு மற்றும் விநியோகத்துறையில் ஈடுபட்டு வரும் எஸ்ஆர்எம் குழுமத்தில் சென்னை வருமானவரித்துறை புலனாய்வு பிரிவு அதிகாரிகள் கடந்த 18ஆம் தேதி தேடுதல் மற்றும் சோதனை நடவடிக்கைகளை மேற்கொண்டனர்.
சென்னை, திருச்சி, டெல்லி, காசியாபாத், சோனேபேட் (அரியானா), பெங்களூரு ஆகிய இடங்களில் நடத்தப்பட்ட இந்த சோதனை நடவடிக்கையில் 250 வருமான வரித்துறை அதிகாரிகள், ஊழியர்கள் பங்கேற்றனர். வருமானவரி புலனாய்வு கூடுதல் இயக்குனர் எஸ்.முரளி, துணை இயக்குனர் ஆர்.சம்பத் குமார் ஆகியோர் தங்கள் குழுவினருடன் இந்த சோதனை நடவடிக்கையை வெற்றிகரமாக நடத்தினர்
இந்த நடவடிக்கைகளின்போது, ரூ.6.45 கோடி ரொக்க பணம் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும், நன்கொடை வாங்கிய ஆவணங்கள், செலவு அதிகரித்து காட்டப்பட்ட தஸ்தாவேஜுகள், அறக்கட்டளை பணத்தை வேறு இனங்களுக்கு திருப்பிவிடப்பட்ட ஆவணங்கள் சிக்கின. வருமான வரி ஏய்ப்பு செய்யப்பட்டு இருந்ததும் கண்டுபிடிக்கப்பட்டது என்று சென்னை வருமானவரித்துறை புலனாய்வு பிரிவு (தலைமையகம்) இணை இயக்குனர் சஞ்சய் வி.தேஷ்முக் கூறி உள்ளார்.
அது வேற பணம்... பச்சமுத்து மறுப்பு
வருமான வரித்துறையினர் நடத்திய சோதனை குறித்து எஸ்.ஆர்.எம். பல்கலைக்கழக வேந்தர் டி.ஆர்.பச்சமுத்து கூறுகையில், வருமானவரித் துறையினர் எங்கள் நிறுவனங்களிலும், கல்வி நிறுவனங்களிலும் சோதனை நடத்தியது உண்மைதான். ஆனால், அவர்கள் கைப்பற்றியதாக சொல்லப்படும் ரூ.6.45 கோடி பணம், எஸ்.ஆர்.எம். நிறுவனத் தலைவர் வீட்டிலோ அல்லது அலுவலகங்களிலோ, எஸ்.ஆர்.எம். பல்கலைக்கழகத்திலோ, கல்வி நிறுவனங்களிலோ கைப்பற்றப்படவில்லை.
அந்த தொகை வேந்தர் பிலிம்ஸ் படக்க ம்பெனியில் இருந்து கைப்பற்றப்பட்டு இருக்கிறது. அந்த சினிமா நிறுவனத்திற்கும் எனக்கும் எந்த தொடர்பும் இல்லை. அந்த நிறுவனம் எனது கட்சிக்காரர்கள் என் பெயரில் நடத்தும் நிறுவனம் ஆகும். எனவே, கைப்பற்றப்பட்ட தொகைக்கும், எனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்று பச்சமுத்து கூறியுள்ளார்.
-
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
கேட்கும்போதே நெஞ்சம் உறைகிறது.. சஹாரா பாலைவன மணலில் பழுதான லாரி. தாகத்துடன் அநியாயமாய் மாண்ட 49 பேர் -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்? -
சென்னை ரோட்டை கண்ணில் ஒத்திக்கலாம்.. பெங்களூர் நிலைமை படுமோசம்.. டிகே சிவகுமார் என்ன செய்வார்? -
"திமுக இல்லாதது கவலையளிக்கிறது.." ரொம்பவே வருத்தப்பட்டு பேசிய திருமாவளவன்.. என்ன மேட்டர்? -
வாண்டடா வண்டில ஏறிய செ.பா! ஹார்ட் டிஸ்க் திருட்டு என்றதும் பதற்றம் ஏன்? சிடிஆர் நிர்மல்குமார் கேள்வி -
விலகிய 113 ஒன்றிய செயலாளர்கள்.. தவெகவின் ஆபரேஷனால் மிரண்ட அறிவாலயம்! ஸ்டாலின் எடுத்த முக்கிய முடிவு -
"16 ஆண்டுகளுக்கு பின் தாய் வீட்டிற்கு.." வேல்முருகன் எமோஷ்னலாக சொல்ல.. சட்டென குறுக்கிட்ட அன்புமணி -
அதிமுக + திமுகவிற்கு ஷாக்.. 4 மாஜி அமைச்சர்கள் - 8 எம்எல்ஏக்கள் உள்பட 60 பேர் தவெகவில் ஐக்கியம் -
அன்னைக்கே சொன்னாரே டிடிவி தினகரன்! நெருங்கும் கிளைமாக்ஸ்? பாஜக ஸ்கெட்ச்? கொத்து கொத்தாக ஓடும் தலைகள்












Click it and Unblock the Notifications