திருமணத்திற்கு முன் உறவு: ட்வீட் செய்ததற்காக மன்னிப்பு கேட்ட பி.சி. ஸ்ரீராம்

Subscribe to Oneindia Tamil

PC Sreeram says sorry for tweeting irresponsibly
சென்னை: திருமணம் ஆகாத ஆணும், பெண்ணும் உறவு கொண்டு அதன் மூலம் அந்த பெண் கர்ப்பமானால் அவர்கள் கணவன், மனைவியாக கருதப்படுவார்கள் என்ற சென்னை உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பு குறித்து ட்விட்டரில் தான் தெரிவித்த கருத்திற்கு மன்னிப்பு கேட்டுள்ளார் ஒளிப்பதிவாளர் பி.சி. ஸ்ரீராம்.

ஒரு வழக்கில் தீர்ப்பளித்த சென்னை உயர் நீதிமன்றம் கூறியுள்ளது பலரையும் வியப்படைய வைத்துள்ளது. அதாவது திருமணம் ஆகாத ஆணும், பெண்ணும் உறவு கொண்டு அதன் மூலம் அந்த பெண் கர்ப்பமானால் அவர்கள் கணவன், மனைவியாக கருதப்படுவார்கள் என்றும், அந்த குழந்தை முறை தவறிப் பிறந்ததாக கருதப்படமாட்டாது என்றும் நீதிமன்றம் தெரிவித்தது.

இது குறித்து ஒளிப்பதிவாளர் பி.சி. ஸ்ரீராம் ட்விட்டரில் நேற்று கூறியதாவது,

திருமணத்திற்கு முந்தைய செக்சுக்கு பெயர் தற்போது திருமணம் என்று இன்றைய இந்து நாளிதழில் செய்தி ஒன்றை பார்த்தேன். தினமும் அர்த்தமற்ற விஷயங்களை பார்க்க சிறந்த இடம் என் நாடு தான் என்று தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் இன்று ஸ்ரீராம் ட்விட்டரில் தெரிவித்திருப்பதாவது,

சென்னை உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பு பற்றிய எனது ட்வீட்டுக்காக சாரி. பொறுப்பில்லாமல் நான் அப்படி ட்வீட் செய்திருக்கக் கூடாது. சாரி என்று கூறியுள்ளார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+