காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டத்தில் குதிக்கும் 17,500 என்எல்சி ஊழியர்கள்
வடலூர்: என்எல்சி பங்குகளை விற்க முடிவு செய்த மத்திய அரசை எதிர்த்து, காலவரையற்ற வேலைநிறுத்த நோட்டீஸ் வழங்க முடிவு செய்துள்ளது தொழிற்சங்க கூட்டமைப்பு.
நேற்று, நெய்வேலியில் உள்ள அண்ணா தொழிலாளர் ஊழியர் சங்க அலுவலகத்தில் வைத்து அண்ணா தொழிலா ளர் ஊழியர் சங்க பொதுச்செயலாளர் உதயகுமார் தலைமையில், அனைத்து தொழிற்சங்க பிரதிநிதிகள் பங்கேற்ற முதல் கட்ட ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
கூட்டத்தில், தொமுச தலைவர் திருமாவளவன், பொருளாளர் அண்ணாத்துரை, அலுவலக செயலாளர் ஸ்ரீதரன், ஆகியோர் முன்னிலை வகிக்க, அண்ணா தொழிலாளர் ஊழியர் சங்க தலைவர் அபு, சிஐடியு குப்புசாமி, வேல்முருகன், ஐஎன்டியுசி ரவிக்குமார், பாட்டாளி தொழிற்சங்க பொதுச்செயலாளர் திலகர், ஏஐடியுசி மாவட்ட செயலாளர் சேகர் உள்ளிட்ட 12 தொழிற்சங்க நிர்வாகிகள் பங்கேற்றனர்.
என்எல்சியின் பங்கு விற்கும் முடிவை எடுத்த மத்திய அரசை, கண்டிக்கும் வகையில் காலவரையற்ற வேலைநிறுத்தம் செய்வது என அக்கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது. இன்று மாலை அதிகாரப்பூர்வமாக, வேலை நிறுத்த நோட்டீஸ்ஸை வழங்கப்போவதாகவும் தொழிற்சங்கத்தினர் தெரிவித்துள்ளனர்.
-
300 கோடி சொத்துக்காக நந்தனாவை நடுத்தெருவில் நிறுத்தினாங்களா? பாரதிராஜா குடும்பத்தில் இப்படி சிக்கலா? -
"கலைஞர் டிவி, ஜெயா டிவிக்கு அடுத்ததாக 'வெற்றி டிவி'... ஜூன் 22-ல் லோகோ வெளியீடு? விஜய்யின் அடுத்த மாஸ்டர் மூவ் இதுதானா?" -
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு -
SP Velumani: உங்க சங்காத்தமே வேண்டாம்.. சிங்கப்பூர் சென்ற SP வேலுமணி.. எடப்பாடிக்கு பைனல் மெசேஜ் -
சாய்பாபா காலனி பிரச்சனை ஓவர்.. சிங்காநல்லூருக்கும் விடிவு காலம்.. தவெக ஆட்சியில் பிறந்த நம்பிக்கை -
மனித மூளையை உலுக்கக்கூடிய ஒரு விஷயம்.. ஏஐ குறித்து சத்ய நாதெல்லா பதிவு.. கமல் பதில் -
ஸ்டாலின் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்.. அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நோட்டீஸ் -
தமிழ்நாடுக்கு போட்டியாக கிளம்பிய குஜராத்.. விஜய்-க்கு நேரடி சவால்! -
நீலாங்கரை வீட்டிற்குள் நுழைந்த மாஸ் பிரபலம்! அண்ணன் விஜய்யை கண்டதுமே கட்டிப்பிடித்து உருகிய சிம்பு -
குத்துவிளக்கு ஏற்ற சொன்னா இப்படியா செய்வது? Narcissistic Behaviour ப்ரோ! விஜய்யை வறுத்த அதிமுக -
நடிகர் வாகை சந்திரசேகருக்கு கிடைத்த கௌரவம்.. பல வருட உழைப்புக்கு அங்கீகாரம்! குவியும் பாராட்டு












Click it and Unblock the Notifications