கேதர்நாத் கோவில் மணியைப் பிடித்து தொங்கி, பிணங்கள் மேல் நின்று உயிர் பிழைத்த நபர்
டேராடூன்: கேதர்நாத் கோவில் மணியை பிடித்துக் கொண்டு பிணங்கள் மேல் நின்று ஒருவர் உயிர் பிழைத்துள்ளார்.
உத்தரகண்ட் மாநிலத்தில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதில் சிக்கி ஆயிரக்கணக்கானோர் பலியாகி உள்ளனர். இந்நிலையில் தெஹ்ரியைச் சேர்ந்த விஜேந்தர் சிங் நெகி(36) கேதர்நாத் கோவில் மணியைப் பிடித்துக் கொண்டு உயிர் பிழைத்த அதிசயம் நடந்துள்ளது.

இது குறித்து அவரின் மைத்துனர் கங்கா சிங் பந்தாரி கூறுகையில்,
நெகி உயிர் பிழைத்து வந்ததே ஒரு அதிசயம். இறந்தவர்கள் நெகியின் உயிரை காப்பாற்றியுள்ளனர். அவர் காலை 7 மணி முதல் மாலை 4 மணி வரை கேதர்நாத் கோவில் மணியைப் பிடித்து தொங்கியுள்ளார். கழுத்தளவு நீரில் தொங்கிய அவர் இறந்தவர்களின் பிணங்கள் மீது நின்று பேலன்ஸ் செய்துள்ளார். நீரின் வேகத்தில் அவரது ஆடைகள் கூட கிழிந்துவிட்டன. ஆனால் அவர் எப்படியோ தாக்குபிடித்துவிட்டார். நாங்கள் தங்கியிருந்த ஹோட்டல் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டபோது நெகி தண்ணீரில் குதித்து கேதர்நாத் கோவிலுக்கு சென்றுவிட்டார். கோவிலுக்குள் நூற்றுக்கணக்கான பிரேதங்கள் மிதந்ததைப் பார்த்துள்ளார்.
9 மணிநேரம் மணியைப் பிடித்து தொங்கிய அவரின் கைகள் வலுவிழந்துவிட்டன. பேலன்ஸ் செய்ய அவர் மிதந்த பிணங்களின் மீது நின்றுள்ளார். தண்ணீர் சற்று குறைந்தவுடன் அவர் அருகில் உள்ள காட்டுப் பகுதிக்கு சென்று அங்கு 2 நாட்கள் தவித்துள்ளார். அதன் பிறகே ராணுவ ஹெலிகாப்டர்கள் அவரை மீட்டன.
அவர் உயிருடன் வந்ததைப் பார்த்து அவரது குடும்பத்தார் ஆனந்த கண்ணீர் விட்டனர். கடவுளின் அருளால் சாவின் விளிம்பு வரை சென்ற அவர் பத்திரமகா வந்துள்ளார் என்றார்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications