அப்பா செத்தது முதல் பிறந்தநாள் கொண்டாடுவதை நிறுத்திய ஜாக்சன் மகள்
லாஸ் ஏஞ்சலெஸ்: மறைந்த மைக்கேல் ஜாக்சனின் மகள் பாரிஸ் ஜாக்சன், தனது தந்தை இறந்தது முதல் பிறந்த நாள் கொண்டாடுவதை நிறுத்தி விட்டாராம்.
சமீபத்தில் பாரிஸ் தற்கொலைக்கு முயன்று உயிர் பிழைத்தது நினைவிருக்கலாம். அதன் பின்னர் பாரிஸ் குறித்த செய்திகள் அதிகம் வெளியாகி வருகின்றன.

இந்த நிலையில் தனது தந்தை இறந்தது முதல் பிறந்த நாளைக் கொண்டாடுவதை பாரிஸ் நிறுத்தி விட்டதாக ஒரு செய்தி வெளியாகியுள்ளது.
இந்த செய்தியை மைக்கேல் ஜாக்சனின் முன்னாள் சமையல்காரர் கை சேஸ் தெரிவித்துள்ளார்.
கடைசியாக தனது 11வது பிறந்த நாளைத்தான் பாரிஸ் கொண்டாடினாராம். தற்போது பாரிஸுக்கு 15 வயதாகிறது என்பது குறிப்பிடத்தக்கது. ஜாக்சனுக்கு பாரிஸ் உள்ளிட்ட தனது குழந்தைகள் அத்தனை பேரும்தான் உலகம் என்றும் சேஸ் நெகிழ்ச்சியுடன் கூறினார்.
தனது 15வது பிறந்த நாளின்போது தனது தாயார் டெப்பி ரோவுடன் காணப்பட்டார் பாரிஸ். ஆனால் அன்று தனது பிறந்த நாளை அவர் கொண்டாடவில்லையாம்.












Click it and Unblock the Notifications