அட!.. சொல் பேச்சுக் கேட்காத மனைவிகளை 'புட்டத்தில்' அடிக்க கிறிஸ்தவ அமைப்பு அட்வைஸ்!!
லாஸ் ஏஞ்சலெஸ்: அமெரிக்காவைச் சேர்ந்த கிறிஸ்தவ அமைப்பு ஒன்று, சொல் பேச்சு கேட்காத மனைவிகளை அவர்களின் புட்டத்தில் அடித்துத் திருத்துமாறு கணவர்மார்களுக்கு அறிவுரை கூறியுள்ளது. இது அங்கு சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
புட்டத்தில் எதைக் கொண்டு அடிக்கலாம் என்பதை ஒரு லிஸ்ட்டாகவும் அந்த அமைப்பு தொகுத்து வழங்கியுள்ளது.
பிரஷ், பெரிய மரக் கரண்டி ஆகியவை அந்த அமைப்பு பரிந்துரைத்துள்ள 'ஆயுதங்களில்' சிலவாகும்.
சொல் பேச்சுக் கேட்காத மனைவிகளை இப்படி அடித்து் திருத்தலாம் என்று பைபிளில் கூறியிருப்பதாகவும் அந்த அமைப்பு விளக்கம் தருகிறது.

கிறிஸ்தவ குடும்ப ஒழுங்கு அமைப்பு
இந்த அமைப்பின் பெயர் கிறிஸ்தவ குடும்ப ஒழுங்கு அமைப்பு (Christian Domestic Discipline - CDD) என்பதாகும். இது ஏகப்பட்ட பரிந்துரைகளை, அறிவுரைகளை கிறிஸ்தவக் குடும்பங்களுக்கு தனது இணையதளம் மூலம் வழங்கி வருகிறது.

கிளின்ட் - செல்சியா
இந்த அமைப்பை நடத்துவது கிளின்ட், செல்சியா தம்பதியர் ஆவர். இவர்கள் இதுதொடர்பாக ஒரு சிடியையும் வெளியிட்டுள்ளனர்.

கணவர்தான் தலைவன்
இந்த அமைப்பின் இணையதளத்தில் இதுதொடர்பாக கூறப்பட்டுள்ளதாவது.. கணவர்தான் வீட்டுக்குத் தலைவன் என்பது ஏற்றுக் கொள்ளப்பட்ட ஒன்று. பைபிளிலும் இப்படித்தான் சொல்லப்பட்டுள்ளது. எனவே தனது ஆதிக்கத்தை நிலைநிறுத்த கணவருக்கு முழு அதிகாரம் உள்ளது.

சொல் பேச்சு கேட்காட்டி அடிங்க
அதன்படி தனது மனைவி தனது சொல் பேச்சைக் கேட்காவிட்டால் அவர்களை கணவர் அடித்துத் திருத்தலாம்.

புட்டத்தில் அடிங்க
மனைவியரை புட்டத்தில் அடித்துத் திருத்த கணவருக்கு உரிமை உண்டு. இதில் தவறில்லை என்று அதில் கூறப்பட்டுள்ளது.

எப்படி அடிக்கலாம்... அதற்கும் விளக்கம்
இந்த சிடியில், மனைவியரை எப்படி அடிக்கலாம், எதை வைத்து அடிக்கலாம் என்பது குறித்தும் விளக்கம் தந்துள்ளனர் கிளின்ட் தம்பதியர்.

மடியில் படுக்க வைத்து
மடியில் மனைவியை படுக்க வைத்துக் கொண்டு புட்டத்தில் அடிக்கலாமாம்.

படுக்கையில் படுக்க வைத்தும் அடிக்கலாம்
படுக்கையில் படுக்கவைத்தும் மனைவியை புட்டத்தி்ல அடிக்கலாமாம்.

எதை வைத்து அடிக்கலாம்?
பெரிய மரக் கரண்டி, தலை வாரஉதவும் பெரிய பிரஷ், சப்பாத்திக் கட்டை, வெறும் கை ஆகியவற்றைக் கொண்டு புட்டத்தில் அடிக்கலாமாம்.

டிரஸ்ஸோடும், டிரஸ் இல்லாமலும்...
டிரஸ் அணிந்தபடியும் மனைவியை அடிக்கலாம் அல்லது டிரஸ்ஸைக் கழற்றி விட்டும் புட்டத்தில் அடிக்கலாமாம்..

ரொம்ப அடிக்காதீங்க
அதேசமயம், இந்த அடியானது மென்மையாக இருக்க வேண்டும். அடிவாங்குபவரின் சம்மதத்துடன்தான் அடிக்க வேண்டும். கோபமாகவோ அல்லது வேகமாகவோ அடிக்கக் கூடாது என்றும் கிளின்ட் தம்பதி வலியுறுத்தியுள்ளது.

இதெல்லாம் ரொம்ப ஓவரப்பா...
ஆனால் இப்படி கணவரிடம் புட்டத்தில் அடி வாங்கிய ஒரு பெண் கடும் கோபமாகி விவாகரத்து வரை போய் விட்டாராம். இதுகுறித்து அந்தப் பெண் கூறுகையில், அடி வாங்குகிறாயா, விவாகரத்து செய்கிறாயா என்று எனது கணவர் கேட்டபோது விவாகரத்தே மேல் என்று கூறி விட்டேன். இப்படி அடிக்கிற வேலையெல்லாம் என்கிட்ட ஆகாது என்றார் கோபமாக.

பைபிளில் அப்படியா சொல்லியுள்ளது...?
இந்த சர்ச்சை குறித்து பிரையன் பிஷர் என்பவர் கூறுகையில், புதிய ஏற்பாட்டில், மனைவியானவர், கணவரின் தலைமையின் கீழ் வருவதாக தெளிவாக கூறப்பட்டுள்ளது. கணவருக்கு அடி பணிந்தவர் மனைவி என்றும் அதில் சொல்லப்பட்டுள்ளது. அதேசமயம், இப்படி கணவர் அடிக்கலாம் என்று அதில் கூறப்படவில்லை என்று விளக்கினார்.
அமெரிக்காவிலும் இப்படியாப்பா....?












Click it and Unblock the Notifications