சேலத்தில் பேத்தியின் மாமியாருடன் கள்ளத்தொடர்பு: வாட்ச்மேன் கழுத்து அறுத்து கொலை

Subscribe to Oneindia Tamil

சேலம்: சேலத்தில் பேத்தியின் மாமியாருடன் கள்ளத் தொடர்பு வைத்திருந்தவர் கழுத்து அறுத்து கொலை செய்யப்பட்டார்.

சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே உள்ள மலையம்பட்டியைச் சேர்ந்தவர் சின்னப்பன்(58). அவர் பைத்தூர் முருகன் கோவில் மலையில் இருக்கும் தமிழ்நாடு அரசு கிரானைட் குவாரியில் காவலாளியாக வேலை பார்த்தார்.

மகன்களுடன் தகராறு ஏற்பட்டதால் அவர் செந்தாரப்பட்டி மண்மலை செங்ககட்டில் உள்ள மகள் சம்பூரணத்தின் வீட்டில் தங்கி வேலைக்கு சென்று வந்தார். கடந்த 20ம் தேதி வேலை முடிந்து இரவு 9 மணிக்கு மொபட்டில் வீட்டுக்கு வந்து கொண்டிருந்த அவரை மர்ம நபர்கள் வழிமறித்து கழுத்தை அறுத்துக் கொன்றனர்.

இது குறித்து வழக்குப் பதிவு செய்த மல்லியக்கரை போலீசார் இறந்த சின்னப்பனுக்கு பல பெண்களுடன் தகாத உறவு இருந்ததால் அவர்கள் குறித்து விசாரித்தனர்.

விசாரணையில் அரசநத்தம் பஞ்சாயத்து தலைஊத்து என்ற பகுதியைச் சேர்ந்த சுப்ரமணி என்பவரின் மனைவி பாப்பாத்திக்கும், சின்னப்பனுக்கும் கடந்த 3 மாதங்களாக தொடர்பு இருந்தது தெரிய வந்தது. இந்த கள்ளத் தொடர்பு பற்றி அறிந்த சுப்ரமணி தனது மனைவி மற்றும் சின்னப்பனை கண்டித்துள்ளார். ஆனால் அப்படியும் அவர்கள் கள்ளத் தொடர்பை தொடர்ந்தனர். இதனால் ஆத்திரமடைந்த சுப்ரமணி சின்னப்பனை கொலை செய்துள்ளார். இதையடுத்து சுப்ரமணி நேற்று கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட பிறகு சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.

சின்னப்பனின் மகள் சம்பூரணித்தின் மகள் பூங்கொடிக்கு சுப்ரமணி மாமனார் ஆவார் என்பது குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+