நிதாகத் விவகாரம்: சவுதியில் இருந்து நாடு திரும்பும் தமிழர்களை காக்க கருணாநிதி கோரிக்கை

இது தொடர்பாக இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
சவுதி அரேபியாவில் நிதாகத் என்ற சட்டம் கொண்டு வரப்பட்டு, அதன் பெயரால் அந்த நாட்டில் பணியாற்றி வந்த வெளிநாட்டினரையெல்லாம் திரும்ப அனுப்பும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு, இதன் காரணமாக 60 ஆயிரம் இந்தியர்கள் அந்த நாட்டிலே பணியாற்றிக் கொண்டிருப்பவர்கள் இந்தியாவுக்குத் திரும்ப அனுப்பப்படவிருப்பதைப் பற்றியும், அந்த 60 ஆயிரம் இந்தியர்களில் ஆயிரத்திற்கு மேற்பட்டவர்கள் தமிழர்கள் என்பது பற்றியும் அவர்கள் தொடர்ந்து அங்கேயே பணியாற்ற இந்திய அரசும், தமிழ் மாநில அரசும் உதவிட முன் வர வேண்டுமென்றும் கடந்த வாரம் நான் விடுத்த அறிக்கையிலே கேட்டுக் கொண்டிருந்தேன்.
ஆனால் வேறு வழியின்றி சவுதி அரேபியாவில் பணியாற்றி வரும் இந்தியர்களை அங்கிருந்து இந்தியாவிற்குத் திருப்பி அனுப்பிடும் வேலையில் இந்தியத் துதரகம் கடந்த இரண்டு மூன்று நாட்களாகத் தீவிரமாக ஈடுபட்டுள்ளதாகவும், இது தொடர்பாக சம்பந்தப்பட்ட இந்தியர்களுக்கு ஏற்கனவே இந்தியத் தூதரகம் சார்பில் தகவல் கொடுக்கப்பட்டுள்ளதாகவும் மத்திய அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அவ்வாறு திரும்பி வரும் தமிழர்களை வரவேற்று, அவர்களுக்கான வாழ்வாதாரத்தை அளித்திடும் வகையில் உடனடியாகத் தேவையான நிதி உதவி, கடன் உதவி உள்ளிட்ட உதவிகளைச் செய்து அவர்களுடைய குடும்பங்களைக் காப்பாற்றுவதற்கு மத்திய, மாநில அரசுகள் முன் வரவேண்டுமென்றும், அவர்களுக்குத் தமிழகத்திலேயே நிரந்தரப் பணி வழங்கிட வேண்டும் இவ்வாறு கருணாநிதி கேட்டுக் கொண்டுள்ளார்.
-
Vairamuthu: கருணாநிதியின் 103-வது பிறந்தநாள்.. கவிதையால் புகழாரம் சூட்டிய வைரமுத்து -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம்












Click it and Unblock the Notifications