பிரதமர் வீட்டைக் கூட்டிப் பெருக்கக் கூட தகுதியில்லாதவர் முலாயம்- பேனி பிரசாத் பேச்சு

Subscribe to Oneindia Tamil

Beni blasts Mulayam again
பைசாபாத்: பிரதமர் பதவிக்கு ஆசைப்படும் முலாயம் சிங், பிரதமர் வீட்டைக் கூட்டிப் பெருக்கி கழுவக் கூட லாயக்கில்லாதவர் என்று மத்திய அமைச்சர் பேனி பிரசாத் வர்மா காட்டமாக பேசியுள்ளார்.

ஒரு காலத்தில் முலாயம் சிங்யாதவுக்கு மிகவும் நெருக்கமாக இருந்தவர் இந்த பேனி பிரசாத் வர்மா என்பது நினைவிருக்கலாம். இந்த நிலையில் பிரதமர் மன்மோகன் சிங்கை காட்டமாக விமர்சித்து வரும் முலாயமை கடுமையாக விமர்சித்துள்ளார்.

ஏற்கனவே முலாயம் சிங் யாதவை மிகக் கடுமையாக விமர்சித்து காங்கிரஸ் கட்சிக்கும், காங்கிரஸ் கூட்டணி அரசுக்கும் பெரும் தர்மசங்கடத்தைக் கொடுத்தவர் இந்த பேனி. பேனியின் பேச்சால் கொதித்த முலாயம் சிங் யாதவ், அரசுக்கு கொடுத்து வரும் ஆதரவை வாபஸ் பெறும் முடிவுக்கு கிட்டத்தட்ட வந்து விட்டார். இருப்பினும் காங்கிரஸின் சமாதான முயற்சிகளால் அந்த முடிவைக் கைவிட்டார்.

இந்த நிலையில், தற்போது மீ்ண்டும் முலாயமை கடுமையாக திட்டியுள்ளார் பேனி. இதுகுறித்து அவர் கூறுகையில், பிரதமர் ஆக ஆசைப்படும் முலாம்சிங்குக்கு, பிரதமர் இல்லத்தை கூட்டிப்பெருக்கி சுத்தம் செய்யும் தகுதி கூட இல்லை என்றார்.

அவரது இந்தப் பேச்சு காங்கிரஸை மறுபடியும் எரிச்சலுக்குள்ளாக்கியிருக்கிறது. இதுகுறித்து உடனடியாக விளக்கம் அளித்த காங்கிரஸ், இது பேனியின் தனிப்பட்ட பேச்சு. இதற்கும், காங்கிரஸுக்கும் சம்பந்தம் இல்லை என்று கூறியுள்ளது.

பேனியின் இந்தப் பேச்சுக்கு முலாயம் சிங் யாதவின் சமாஜ்வாடிக் கட்சி என்ன பதிலடி தரப் போகிறதோ என்ற கவலையில் தற்போது காங்கிரஸ் உள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+