இமெயில்களை வைத்து இத, இதெல்லாம் தான் செய்யக் கூடாது

Subscribe to Oneindia Tamil

வாஷிங்டன்: இமெயிலை வைத்து செய்யக் கூடாத 11 விஷயங்கள் வெளியிடப்பட்டுள்ளன.

கிரெட்டி.காம் மற்றும் ஐடென்டிட்டி தெப்ட் 911 ஆகியவற்றின் நிறுவனர் ஆதம் லெவின் இமெயிலை வைத்து செய்யக் கூடாத 11 விஷயங்களை தெரிவித்துள்ளார்.

என் இமெயில் கணக்கை ஹேக் பண்ணிட்டாங்களே, என் பாஸ்வேர்டை எனக்கே தெரியாமல் யாரோ மாற்றிவிட்டார்களே, இமெயிலில் வந்த விளம்பரத்தை பார்த்து மோசம் போனேனே என்று சொல்பவர்களுக்காகத் தான் இந்த செய்தி.

இன்டர்நெட் மையம்

இன்டர்நெட் மையம்

இன்டர்நெட் மையம், நூலகம் ஆகியவற்றில் உள்ள கம்ப்யூட்டர்களை பயன்படுத்தி இமெயிலை செக் பண்ண வேண்டாம். அவற்றில் உங்கள் பாஸ்வேர்டை திருடும் மால்வேர் இருக்கலாம்.

லாக் அவுட்

லாக் அவுட்

இமெயிலை செக் பண்ணி முடித்த கையோடு லாக் அவுட் செய்துவிடுங்கள். அப்படியே விட்டுவிட்டால் அது பிரச்சனை தான்.

ஒரே லாகின் பெயர், பாஸ்வேர்ட் வேண்டாமே

ஒரே லாகின் பெயர், பாஸ்வேர்ட் வேண்டாமே

கூகுள், ஹாட்மெயில் என்று பல்வேறு தளங்களில் இமெயில் கணக்கு வைத்திருந்தால் அனைத்துக்கும் ஒரே லாகின் பெயர் மற்றும் பாஸ்வேர்டை வைக்காதீர்கள்.

படித்த இமெயிலை டிலீட் பண்ணுங்க

படித்த இமெயிலை டிலீட் பண்ணுங்க

சிலர் படித்து முடித்த பழைய இமெயில்களை டிலீட் செய்ய மாட்டார்கள். அதில் அவர்களின் முகவரி, யூசர்நேம் மற்றும் பாஸ்வேர்டுகள், நண்பர்களின் செல்போன் நம்பர்கள் உள்ளிட்ட முக்கிய விவரங்கள் இருக்கும். இவை ஹேக்கர்கள் கையில் கிடைத்தால் உங்களுக்கு தானே பிரச்சனை.

உங்களுக்கு குறைந்த வட்டியில் கடன்

உங்களுக்கு குறைந்த வட்டியில் கடன்

உங்களுக்கு குறைந்த வட்டியில் இத்தனை லட்சம் ரூபாய் கடன் தருகிறோம் என்று இமெயில் வந்தால் அது போலியாக இருக்கலாம். அதனால் அதை டிலீட் செய்துவிடுங்கள்.

சந்தேகத்திற்கிடமான இமெயில்

சந்தேகத்திற்கிடமான இமெயில்

சிலர் தங்கள் நண்பர்களிடம் இருந்து வந்த சந்தேகத்திற்கு இடமான இமெயில்களால் பணத்தை இழந்த கதைகள் உண்டு. உதாரணமாக உங்கள் நண்பரின் இமெயில் முகவரியில், நான் இந்த நாட்டில் இந்த இடத்தில் சிக்கிக் கொண்டேன். அதனால் உடனே எனக்கு இவ்வளவு பணம் அனுப்பவும் என்று வந்திருக்கும். நீங்களும் அவசரத்தில் பணத்தை அனுப்பினால் ஓட்டாண்டியாக வேண்டியது தான். அப்படிப்பட்ட இமெயில்களில் நான் இருக்கும் இடத்தில் செல்போன் டவர் இல்லை, இன்டர்நெட் இல்லை இதுவே ஏதோ அதிசயமாக டவர் கிடைத்து அனுப்பினேன் என்று இருக்கும். உண்மையில் நண்பரின் இமெயில் கணக்கு ஹேக் செய்யப்பட்டிருக்கும்.

வங்கி இமெயில்

வங்கி இமெயில்

உங்கள் வங்கிக் கணக்கு மற்றும் பாஸ்வேர்டை சரிசெய்யக் கோரி இமெயில் வந்தால் அதில் உள்ள லிங்கை கிளிக் செய்து விடாதீர்கள். எந்த வங்கியும் பாஸ்வேர்டை கேட்டு இமெயில் அனுப்பாது.

முதலீட்டு குறிப்புகள்

முதலீட்டு குறிப்புகள்

நான் வால்ஸ்ட்ரீட்டில் பணிபுரிகிறேன். உங்களுக்கு அருமையான முதலீட்டு குறிப்புகள் தருகிறேன். நீங்கள் செய்ய வேண்டியது எல்லாம் பணம் போட வேண்டியது தான் என்று இமெயில் வந்தால் முதலில் அதை டிலீட் செய்துவிட்டு மறுவேலையை பாருங்கள்.

இப்படியும் ஏமாற்றுகிறார்கள்

இப்படியும் ஏமாற்றுகிறார்கள்

உங்களுக்கு இந்த பிரபல நிறுவனத்தின் குலுக்கலில் இவ்வளவு பணம் பரிசாக கிடைத்துள்ளது. அதை பெற நீங்கள் இந்த தொகையை அனுப்ப வேண்டும் என்று இமெயில் வந்தால் தயவு செய்து நம்ப வேண்டாம்.

நிவாரணம்

நிவாரணம்

அமெரிக்காவை புயல் தாக்கியுள்ளது. அதனால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரண நிதி அளியுங்கள் என்று சைபர் குற்றவாளிகள் இமெயில் அனுப்புகிறார்கள்.

டிராவல் டீல்

டிராவல் டீல்

சூப்பரான சுற்றுலா சலுகைகள் அறிவித்து வரும் இமெயில்களை கிளிக் செய்ய வேண்டாம்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+