இந்தோனேஷிய நிலநடுக்கத்தில் 22 பேர் பலி... ஆயிரக்கணக்கானோர் முகாம்களில் தஞ்சம்

இந்தோனேசியாவின் அசேஹ் மாகாணத்தின் தலைநகரான பண்டா அசேஹ்-விலிருந்து தென்கிழக்கே 188 கிலோமீட்டர் தொலைவில் நேற்று நிலநடுக்கம் மையம் கொண்டிருந்தது. பூமிக்கடியில் 10 கிலோமீட்டர் ஆழத்தில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கத்தின் அதிர்வுகள் பல இடங்களில் உணரப்பட்டது. ஆனால் சுனாமி எச்சரிக்கை எதுவும் விடப்படவில்லை. இது ரிக்டர் அளவுகோலில் 6.1 ஆகப் பதிவாகியுள்ளதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ள
நிலநடுக்கத்தினால்கட்டிடங்கள் ஒரு நிமிடம் வரை குலுங்கின. இதனால் அச்சமடைந்த மக்கள் வீடுகளை விட்டு வெளியே ஓடி வந்தனர். நிலநடுக்கத்தால் ஏற்பட்ட நிலச்சரிவு மற்றும் கட்டட இடிபாடுகளில் சிக்கி 22 பேர் உயிரிழந்தனர், 210 பேர் காயமடைந்தனர். காயமடைந்த அனைவரும் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். நிலநடுக்கத்தில் கடுமையாகப் பாதிக்கப்பட்ட பெனெர் செமராக் மாவட்டத்தில் வீடுகளை இழந்தவர்கள் அரசின் தற்காலிக முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
கடந்த 2004-ம் ஆண்டு இந்த பகுதியில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால், சுனாமி பேரலை இந்திய பெருங்கடல் பகுதியில் உள்ள நாடுகளில் பெரும் உயிர்ச்சேதத்தையும், பொருட்சேதத்தையும் ஏற்படுத்தியது. ஆசியா கண்டத்தில் 2,30000 மக்கள் கொல்லப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications