என் மகனை யாரோ கொன்று தண்டவாளம் அருகே போட்டுவிட்டு நாடகமாடுகிறார்கள்: இளவரசனின் தந்தை கண்ணீர்

தர்மபுரி அரசு கலைக்கல்லூரிக்கு பின்புறம் உள்ள ரயில் தண்டவாளத்திற்கு அருகே தனது மகன் இளவரசன் பிணமாக கிடப்பது குறித்து அறிந்து இளங்கோவன் அங்கு ஓடி வந்தார். பிணமாக கிடப்பது தனது மகன் தான் என்பதை பார்த்ததும் அவர் கதறி அழுதார். அவருக்கு உறவினர்கள் ஆறுதல் கூறினர்.
பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில்,
என் மகன் திவ்யாவை கடந்த 8 மாதங்களுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டான். அன்று முதல் அவர்கள் மகிழ்ச்சியாகத் தான் வாழ்ந்து வந்தனர். அவர்கள் இருவரும் பெங்களூரில் குடித்தனம் நடத்தினர். பின்னர் பிரச்சனை தீர்ந்துவிடும் என்று நினைத்து நான் அவர்களை இங்கு அழைத்து வந்தேன். அவர்கள் இங்கு வந்த பிறகு திவ்யாவை அவரது தாய் மற்றும் அவரது குடும்பத்தினர் அடிக்கடி சந்தித்து பேசினர். திவ்யாவின் குடும்பத்தினரிடம் இருந்து செல்போனில் அழைப்பு வந்தால் உடனே அவர் மாடிக்கு சென்று பேசுவார்.
அவரது குடும்பத்தார் அவரின் மனதை மாற்ற முயன்று மாற்றியும்விட்டனர். இதனால் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் ஆஜரான திவ்யா தனது தாயுடன் செல்ல விரும்புவதாக தெரிவித்தார். இதையடுத்து நாங்கள் கவலை அடைந்தோம். ஆனால் என் மகனோ கவலைப்படாதீர்கள் பிரச்சனை சுமூகமாக தீரும் என்று எனக்கு நம்பிக்கை அளித்தான்.
இந்த நிலையில் நேற்று முன்தினம் காலை அவன் ஏடிஎம்மில் ரூ.9,000 பணம் எடுத்துள்ளான். எனது செல்போனில் மெசேஜ் வந்தது. அவனிடம் கேட்டதற்கு நான் தான் அப்பா பணம் எடுத்தேன் என்று கூறினான். இந்நிலையில் பிற்பகல் 2.30 மணிக்கு ரயில் நிலையம் அருகே ஒரு சடலம் கிடக்கிறது அது இளவரசனுடையதாக இருக்கலாம், நீங்கள் வந்து அடையாளம் காட்டுங்கள் என்று ஒரு போலீஸ்காரர் என்னிடம் வந்து கூறினார். இதையடுத்து நான் இந்த இடத்திற்கு வந்து பார்த்தபோது இங்கு பிணமாக கிடந்தது என் மகன் தான் என்பது தெரிய வந்தது.
அவன் தற்கொலை செய்து கொண்டான் என்று கூறுவதை என்னால் நம்பவே முடியவில்லை. யாரோ அவனை கொன்று ரயில் தண்டவாளம் அருகே போட்டுவிட்டு நாடகமாடுகிறார்கள் என்றார்.
அவர் சிலரின் பெயர்களை குறிப்பிட்டு அவர்கள் மீது புகார் கூறினார்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications