என்னை கட்டிக்கறீயா ஸ்னோடென்...: ட்விட்டரில் தூது விட்ட முன்னாள் ரஷ்ய பெண் உளவாளி
மாஸ்கோ: விளாடிமிர் புடின் தான் ரஷ்யாவின் முதன்மையான எல்லா தகுதிகளும் அமையப் பெற்றப் பெண்ணும் திருமணம் செய்து கொள்ள விரும்பும் ஆண் எனப் பத்திரிக்கைகள் புகழ்ந்து கொண்டிருக்க, தற்போது விளம்பர மாடலாக இருக்கும் முன்னாள் ரஷ்ய பெண் உளவாளியின் கண்ணோ ஸ்னோடென் மீது விழுந்துள்ளது.
சமீப காலமாக அமெரிக்காவின் பல திரை மறைவு வேலைகளை உலகிற்கு வெளிச்சம் போட்டுக் காட்டிக் கொண்டிருக்கும் ஸ்னோடென்க்கு தற்போதுவயது 30 ஆகிறது. இவர் அமெரிக்க உளவுப்பிரிவில் வேலை பார்த்த முன்னாள் ஊழியர்.
தன் உயிரைக் காப்பாற்றிக் கொள்ள ஊர் ஊராகச் சுற்றிக் கொண்டிருக்கும் ஸ்னோடென்க்கு குடும்பஸ்தனாகும் வாய்ப்பு கம்யூட்டர் வழியே வந்து குதித்துள்ளது.

பெண் ரஷ்ய உளவாளி...
ஸ்னோடென்னுக்கு காதல் தூது விட்ட அந்த அழகியின் பெயர் அன்னா சாப்மேன். இவர் கடந்த 2010ம் ஆண்டு அமெரிக்காவில் உளவு பார்த்ததாகக் கைது செய்யப்பட்ட 10 ரஷ்ய உளவாளிகளில் ஒருவர். தற்போது 31 வயதாகும் அவர் ரஷ்யாவின் பிரபல விளம்பர மாடலாக உள்ளார்.

என்னை மணப்பாயா..?
தன்னுடைய கல்யாண ஆசை குறித்து ட்வீட்டரில் இவ்வாறு தூது விட்டுள்ளார் சாப்மேன், ‘ஸ்னோடென், என்னைத் திருமணம் செய்து கொள்கிறாயா?'

நா அழகா இருக்கேனா...?
கூடவே, தனது அழகிய புகைப்படத்தையும் இணைத்து அனுப்பியுள்ளார் சாப்மேன். சில மணி நேரக்கள் பதில் வரும் என பொறுத்துப் பார்த்த சாப்மேன், பதில் வராததால், அடுத்த ட்வீட்டை தட்டியுள்ளார்.

குழந்தைகள்...
அதில், ‘நாசா, நீ எங்களுக்கு குழந்தைகள் பிறந்த பின்னும் கண்காணிப்பியா?' என அமெரிக்காவைக் கிண்டலடித்துள்ளார்.

நோ ரிப்ளே...
ஆனால், சேப்மேனின் இந்தக் காதல் தூதுகளுக்கு இதுவரை ஸ்னோடென்னிடமிருந்து எந்த பதிலும் வரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்!












Click it and Unblock the Notifications