''I Love you so much baby....I love you so much''....கதறி அழும் திவ்யா....!
தர்மபுரி: இளவரசன் தனக்குக் கடைசியாக எழுதிய கடிதம் குறித்து கேள்விப்பட்டு அவரது காதல் மனைவி திவ்யா கதறி அழுபடி இருக்கிறாராம். அவருக்கு ஆறுதல் சொல்ல வழி தெரியாமல் குடும்பத்தினர் திகைத்துப் போயுள்ளனர்.
இளவரசன் மரணம் தற்கொலை என்பது கிட்டத்தட்ட உறுதியாகி வருகிறது. இதுதொடர்பாக அவர் எழுதிய கடைசிக் கடிதங்கள் என்று போலீஸார் சிலவற்றை வெளியிட்டுள்ளனர்.
இவை உண்மையிலேயே இளவரசன் எழுதியதா என்பது குறித்து ஆராய தடயவியல் சோதனைக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது. இந்தநிலையில் இளவரசனின் கடிதம் குறித்து அறிந்து திவ்யா கதறி அழுது வருகிறாராம்.
தன் மீது இத்தனை உயிராக இருந்த இளவரசனை பலி கொடுத்து விட்டோமே என்ற வேதனையில் திவ்யா இருப்பதாக கூறப்படுகிறது. இளவரசன் மூன்று கடிதங்களை எழுதி வைத்துள்ளார். திவ்யாவுக்கு, பெற்றோருக்கு, தனது அண்ணன் பாலாஜிக்கு என்று எழுதியுள்ளார்.

அன்புக்காதலி திவ்யாவுக்கு..
திவ்யாவுக்கு அவர் எழுதிய கடிதத்தில் மிகவும் உருக்கமாக தனது காதலை அவர் தெரிவித்துள்ளார். தான் அவர் மீது வைத்திருந்த பாசத்தை விவரித்துள்ளார். இதுதான் திவ்யாவை கலங்கடித்துள்ளதாம்.

நீ வராவிட்டால் இருக்க மாட்டேன்
கடிதத்தில், நீ என்னுடன் இருந்த நாட்கள் என் வாழ்நாளில் மறக்கமுடியாது. நீ என்னை விட்டுப் பிரிந்த நாளில் இருந்து என்னால் எதுவும் செய்ய இயலவில்லை. காரணம், எனக்கு உன்னை மிகவும் பிடிக்கும். ஜுலை 1 ம் தேதிவரை நீ வருவாய், என்னுடன் மீண்டும் சேர்ந்து வாழ்வாய் என்ற நம்பிக்கையுடன் காத்திருக்கிறேன். ஒருவேளை நீ அன்று என்னுடன் வரவில்லை என்றால் கண்டிப்பாக நான் இந்த உலகத்தில் இருக்க மாட்டேன் என்று கூறியுள்ளார் இளவரசன்.

உன்னை ரொம்பப் பிடிக்கும் திவ்யா...
இன்னொரு இடத்தில், உண்மையாகவே என்னால் உன்னை விட்டு வாழமுடியவில்லை. ஏன் எனில் அந்த அளவிற்கு நாம் இரண்டு பேரும் இருந்தோம். எனக்கு உன்ன ரொம்ப பிடிக்கும் திவ்யா. எனக்கு உன்ன ரொம்ப பிடிக்கும்.

என்ன துரோகம் செய்தேன்...
கடிதத்தின் இன்னொரு பகுதியில்... நான் உனக்கு என்ன துரோகம் செஞ்சேன் ? என்கூட ஏன் வாழ வரமாட்டேங்கறன்னு கண்டிப்பா எனக்குத் தெரியல ......
...நாம்ம இரண்டுபேரும் எவ்வளவு கஷ்டத்துக்கும் மேல ஒன்னு சேர்ந்தோம்னு உனக்கு நல்லா தெரியும் என்று ஏக்கத்தை வெளிப்படுத்தியுள்ளார்.

கேவலமா பாத்தவங்க முன்னாடி...
இன்னொரு இடத்தில்... எனக்கு ரொம்ப ஆசை திவ்யா. நம்ம இரண்டு பேரும் நல்லா வாழனும். நம்மள கேவலமாப் பாத்தவங்க முன்னாடி பொறாமைப்படும் அளவுக்கு உன்ன அழகா, கண்கலங்காம வச்சுக்கனும்னு எனக்கு ரொம்ப ஆசை.

என்னை வெறுக்காதே...
ஒரு இடத்தில்... Please திவ்யா என்ன வெறுக்காத எனக்கு உன்னை ரொம்ப பிடிக்கும்.
தயவு செய்து என்னை மன்னித்துவிடு. நீ என்னிடம் கேட்கலாம், உண்மையாகவே நீ என் மேல் பாசம் வைத்தவனாக இருந்தால் ஏன் நீ என்னை விட்டு போகனும்னு......கண்டிப்பா சொல்றேன். நான் உன்ன விட்டுப் போகனும்னு நெனக்கல. எனக்கு உன்னோட சேர்ந்து வாழனும்னு ரொம்ப ஆசை. ஆனால், என்னால உன்னை பிரிந்து வாழ முடியல திவ்யா. என்னை மன்னிச்சுடு. நான் இந்த உலகத்தை விட்டுப் போறேன் என்று கூறியுள்ளார் இளவரசன்.

ஒரே சாதியில் பிறந்து உன்னை மணப்பேன்..
மறு பகுதியில்... இன்னொரு ஜென்மம் இருந்தா நீயும் நானும் ஒரே சாதியில பொறந்து பெத்தவங்க சம்மதத்தோடு கல்யாணம் பண்ணிக்கனும்னு எனக்கு ஆசையா இருக்குடா திவ்யா என்று உருக்கமாக கூறியுள்ளார் இளவரசன்.
'I Love you so much baby....I love you so much என்று அந்தக் கடிதத்தை முடித்துள்ளார் இளவரசன்.

கதறி அழும் திவ்யா
இளவரசன் எழுதியதாக கூறப்படும் இந்தக் கடிதம் இதுவரை திவ்யாவிடம் காட்டப்படவில்லை. அதைக் காட்ட போலீஸார் திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது. ஆனால் இதுதொடர்பாக வெளியாகி வரும் செய்திகளைக் கேட்டும், படித்தும் திவ்யா குமுறி அழுதபடி இருக்கிறாராம். அவரை உறவினர்கள் தேற்றி வருவதாக கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications