உயர்நீதிமன்றம் என்ன உத்தரவிட்டாலும் ஏற்போம்.. இளவரசன் தந்தை
தர்மபுரி: எனது மகனின் மறு பிரேதப் பரிசோதனை தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றம் என்ன உத்தரவிட்டாலும் அதை ஏற்போம். அப்பீல் செய்யும் எண்ணம் இல்லை என்று இளவரசனின் தந்தை இளங்கோவன் கூறியுள்ளார்.
இளவரசன் உடலை மறு பிரேதப் பரிசோதனை செய்ய வேண்டும் என்று இளங்கோவன் கோரிக்கை வைத்துள்ளார். இதுதொடர்பாக ரமேஷ் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு செய்துள்ளார். மேலும் இன்று இளவரசன் உடலை தர்மபுரி அரசு மருத்துவமனையில் பிரேதப் பரிசோதனை செய்த வீடியோவை நீதிபதிகள் குழு பார்வையிட்டுள்ளது.
இந்த நிலையில் இந்த விவகாரம் குறித்து இளவரசனின் தந்தை இளங்கோவன் கூறுகையில், எனது மகனின் பிணத்தை மறு பரிசோதனை செய்ய வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டால் அதன்படி நடந்து கொள்வோம்.
மறு பரிசோதனை தேவையில்லை. தர்மபுரியில் நடந்த பிரேத பரிசோதனை போதும், அதில் சந்தேகம் இல்லை என்று கூறி பிணத்தை பெற்றுக் கொள்ளலாம் என்று உத்தரவிட்டால் தர்மபுரி அரசு மருத்துவக் கல்லூரியில் இருந்து பிணத்தை வாங்கிச் சென்று இறுதிச் சடங்கு செய்வோம்.
எனது மகனின் இறுதிச் சடங்கு நல்லபடியாக நடந்தால் போதும். சென்னை உயர்நீதிமன்றம் பிறப்பிக்கும் உத்தரவுக்கு முழுமையாக கட்டுப்படுவோம். அந்த உத்தரவை எதிர்த்து அப்பீல் செய்ய மாட்டோம் என்றார்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications