அத்வானியை கொல்ல முயன்ற வழக்கில் கைதானவர் நீதிபதி முன்பு தற்கொலை முயற்சி
திருமங்கலம்: அத்வானியை கொல்ல முயன்ற வழக்கில் கைதான விசாரனைக் கைதி கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்ட போது நீதிபதி முன்பு பிளேடால் கழுத்தில் அறுத்து கொண்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
மதுரை அருகே திருநகர் பர்மா காலனியை சேர்ந்தவர் ஜாகீர் உசேன். பாஜக மூத்த தலைவர் அத்வானியை பைப் குண்டு மூலம் கொல்ல முயன்ற வழக்கில் கடந்த மார்ச் 26ம் தேதி திருநகரில் வைத்து இவரை போலீசார் கைதுசெய்தனர்.
பாளையங்கோட்டை சிறையில் அடைக்கப்பட்டிருந்த ஜாகீர் உசேன் நேற்று திருமங்கலம் கோர்ட்டுக்கு ஆஜர் படுத்த அழைத்து வரப்பட்டார். மதியம் 1.15 மணிக்கு நீதிபதி பன்னீர்செல்வம் முன்பு அவரை ஆஜர்படுத்தினர். அப்போது நீதிபதியிடம் எனக்கு பாளையங்கோட்டையில் மதரீதியாக சித்ரவதை நடக்கிறது. எனவே வேறு சிறைக்கு மாற்றுங்கள் என ஜாகீர் உசேன் கோரிக்கை வைத்தார். இதை மனுவாக எழுதி கொடுங்கள் என நீதிபதி தெரிவித்தார். எனவே அவரை போலீசார் வெளியே அழைத்து வந்தனர். மீண்டும்1.30 மணிக்கு உசேன் எழுதிய மனுவுடன் அவரை போலீசார் கோர்ட்டில் ஆஜர்படுத்தினர்.
இந்நிலையில் யாரும் எதிர்பாராத நிலையில் நீதிபதி முன்பு தான் மறைத்து வைத்திருந்த பிளேடால் உசேன் தனது கழுத்திலும், கை மணிக்கட்டுபகுதியிலும் வெட்டி கொண்டார். இதை பார்த்த அனைவரும் அதிர்ந்தனர். நீதிபதி அவரை அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்க உத்தரவிட்டார். திருமங்கலம் அரசு மருத்துவமனையில் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
கடந்த ஏப்ரல் 10ல் மதுரை மத்திய சிறையில் இருந்து திருமங்கலம் கோர்ட்டில் ஆஜர்படுத்த போலீசார் கொண்டு வந்தனர். அப்போது ஜாமீன் வழங்க கோரி திடீரென நீதிபதி பன்னீர்செல்வம் முன்பு பிளேடால் தனது கைகளை அறுத்துக் கொண்டார். எனவே அவர் பாளையங்கோட்டை சிறைக்கு மாற்றப்பட்டார். இந்த நிலையில் தற்போது இரண்டாவது முறையாக அவர் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications