இளவரசன் உடலை மறு பிரேத பரிசோதனை செய்தது டெல்லி எய்ம்ஸ் மருத்துவர் குழு!

Subscribe to Oneindia Tamil

Ilavarasan
சென்னை: மர்மமான முறையில் இறந்த இளவரசனின் உடலை சென்னை உயர்நீதிமன்ற உத்தரவுப்படி டெல்லி எய்ம்ஸ் மருத்துவர்கள் குழு இன்று மறு பிரேத பரிசோதனை செய்தது.

தர்மபுரியில் ரயில்வே தண்டவாளம் அருகே மர்மமான முறையில் இளவரசன் உடல் கண்டெடுக்கப்பட்டது. அவர் தற்கொலை செய்து கொண்டார் என்று கூறும் காவல்துறை அவர் எழுதியதாக கூறும் கடைசி கடிதங்களையும் வெளியிட்டிருக்கிறது. ஆனால் இளவரசனின் பெற்றோரே, திட்டமிட்ட படுகொலை என்கின்றனர். இதனால் இளவரசன் மரணத்தில் மர்மம் தொடருகிறது.

இதைத் தொடர்ந்து சென்னை உயர்நீதிமன்றத்தில் 2 வழக்குகள் தொடரப்பட்டன. அதில் இளவரசன் உடல் மறுபிரேத பரிசோதனை செய்யப்பட வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது. இதை ஏற்ற சென்னை உயர்நீதிமன்றம், இளவரசன் உடலை ஆய்வு செய்ய இரண்டு மருத்துவர்களை நியமித்தார். பின்னர் மருத்துவர்கள் தங்கராஜ், சம்பத்குமார் ஆகியோர் இளவரசன் உடலை ஆய்வு செய்து உயர்நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்தனர். இந்த இருவரும் அளித்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்ட கருத்துகள் மாறுபட்டவையாக இருந்தன.

இதனால் டெல்லி எய்ம்ஸ் மருத்துவர்கள் 3 பேர் கொண்ட குழு இளவரசன் உடலை மறுபிரேத பரிசோதனை செய்யும் என்று நீதிபதிகள் தனபால், சி.டி.செல்வம் ஆகியோர் அடங்கிய பெஞ்ச் நேற்று உத்தரவிட்டது. இந்த உத்தரவைத் தொடர்ந்து டெல்லி எய்ம்ஸ் மருத்துவர்கள் 3 பேர் அடங்கிய குழு இன்று காலை விமானம் மூலம் பெங்களூர் வந்தது. அங்கிருந்து மாவட்ட நிர்வாகத்தினர் சாலை மார்க்கமாக தர்மபுரிக்கு மருத்துவர்களை அழைத்து வந்தனர்.

தர்மபுரி அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டிருந்த இளவசரன் உடலை அவரது தாயார் அடையாளம் காட்ட மருத்துவர்கள் குழு பிரேத பரிசோதனையை மேற்கொண்டது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+