பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.1.55 உயர்வு; நள்ளிரவு முதல் அமலுக்கு வந்தது

15 நாட்களுக்கு ஒரு முறை எண்ணெய் நிறுவனங்களே சர்வதேச சந்தை விலை மற்றும் டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றுக்கு ஏற்ப பெட்ரோல் விலையை மாற்றி அமைத்துக் கொள்ள மத்திய அரசு அனுமதித்து உள்ளது. தனால் 15 நாட்களுக்கு ஒரு முறை பெட்ரோல் விலையில் மாற்றம் செய்யப்படுகிறது.
ஆனால் கடந்த 6 வாரங்களாக பெட்ரோல் விலை குறையவில்லை. உயர்ந்து கொண்டே தான் இருக்கிறது. ஜூன் 1-ந் தேதி பெட்ரோல் விலை லிட்டருக்கு 75 காசுகளும், ஜூன் 16-ந்தேதி 2 ரூபாயும், ஜூன் 29-ந்தேதி ஒரு ரூபாய் 82 காசுகளும் உயர்ந்தது. இப்போது 4-வது முறையாக உயர்த்தப்பட்டுள்ளது.
நள்ளிரவு முதல் மீண்டும் பெட்ரோல் விலை உயர்த்தப்பட்டது. லிட்டருக்கு ஒரு ரூபாய் 55 காசுகள் உயர்த்தி எண்ணெய் நிறுவனங்கள் அறிவித்தன.
வழக்கம் போல 16-ந்தேதி தான் உயர்த்த வேண்டும். ஆனால் எண்ணெய் நிறுவனங்கள் ஒரு நாள் முன்னதாகவே உயர்த்தி விட்டன.இந்த விலை மாநிலங்களில் உள்ள விற்பனை வரி அல்லது மதிப்பு கூட்டு வரிக்கு ஏற்ப மாறுபடும்.
சென்னையில் பெட்ரோல் விலை லிட்டருக்கு ஒரு ரூபாய் 95 காசுகள் உயர்ந்தது. இதன் மூலம் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ.71.65-ல் இருந்து ரூ.73.60 ஆக அதிகரித்தது.
பிற நகரங்களில்
டெல்லியில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ.1.86 உயர்ந்தது. இதனால் அங்கு ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ.68.58-ல் இருந்து ரூ.70.44 ஆனது. அதேபோல கொல்கத்தாவில் ரூ.1.92 உயர்ந்து ஒரு லிட்டர் விலை ரூ.77.76 க்கும், மும்பையில் ரூ.1.94 உயர்ந்து ஒரு லிட்டர் விலை ரூ.77.73 க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
இந்த ஆண்டு தொடக்கத்தில் பெட்ரோல் விலை 4 முறை குறைந்தது. அந்த குறைக்கப்பட்ட விலை, இந்த விலை உயர்வின் மூலம் சரிக்கட்டப்பட்டுவிட்டது.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications