புற்றுநோய் செல்களை கண்டறிய உதவும் சர்க்கரை!

Subscribe to Oneindia Tamil

லண்டன்: ஒருவருக்கு புற்றுநோய் இருப்பதை கண்டறியும் எம்ஆர்ஐ சோதனை செய்யும் போது, அதனை எளிதாக அறிய சர்க்கரை உதவும் என்று விஞ்ஞானிகள் கண்டு பிடித்துள்ளனர்.

லண்டன் கிங்ஸ் கல்லூரி, லண்டன் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் இணைந்து, இதனை கண்டறிந்துள்ளனர். ஸ்கேன்களில் சோதனையின் போது வெளிச்சத்திற்ககாக கட்டிகள் மேலே சர்க்கரை பயன்படுத்தி புற்றுநோய் கண்டறியும் புதிய மற்றும் இலகுவான உத்தியை உருவாக்கியுள்ளனர். இதன் காரணம் மனிதனின் மற்ற செல்களை விட புற்றுநோய் செல்கள் தங்களது வளர்ச்சிக்கு அதிகமான சர்க்கரையை ஈர்த்துக் கொள்கின்றன என்பதுதான்.

Sugar May Be the New Way to Detect Cancer Cells

எம்ஆர்ஐ ஸ்கேன் பயன்படுத்துவதற்கு முன்பே மனிதனின் உடலுக்குள் குளுக்கோஸ் செலுத்தப்படும், புற்றுநோய் செல்கள் அதிகமாக ஈர்த்துக் கொள்ளவதால் எம்ஆர்ஐ ஸ்கேன்களில் எளிதாக அடையாளம் காணலாம்.

புற்றுநோயின் செல்களை எளிதாக காண்பதற்கு இந்த புது நுட்பத்தை ‘ குளுக்கோஸ் இரசாயன பரிமாற்றம் பூரித பரிமாற்றம்(glucocest) ‘என்று பெயரிட்டுள்ளனர்.

எதிர்காலத்தில், நோயாளிகள் சிறப்பு மருத்துவ மையங்களை காட்டிலும் உள்ளூர் மருத்துவ மையங்களிலும் ஆற்றல்மிக்க ஸ்கேன் செய்யப்பட முடியும் என்று தெரிய வருகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+