For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

சீக்கியருக்கு எதிரான வன்முறை . சஜ்ஜன் குமாரின் மனுவை தள்ளுபடி செய்தது டெல்லி ஹைகோர்ட்

By Mathi
Google Oneindia Tamil News

1984 anti-Sikh riots: Delhi HC dismisses Sajjan Kumar's plea, trial to continue
டெல்லி: 1984ஆம் ஆண்டு நிகழ்ந்த சீக்கியர்களுக்கு எதிராக வன்முறை சம்பவங்களில் தம் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டதை எதிர்த்து மூத்த காங்கிரஸ் தலைவர் சஜ்ஜன்குமார் தாக்கல் செய்த மனுவை டெல்லி உயர்நீதிமன்றம் இன்று தள்ளுபடி செய்துள்ளது.

1984ஆம் ஆண்டு அப்போதைய பிரதமர் இந்திரா காந்தி படுகொலை செய்யப்பட்டார். அவர் சீக்கிய காவலர்களால் படுகொலை செய்யப்பட்டதைத் தொடர்ந்து நாடு முழுவதும் சீக்கியர்களுக்கு எதிராக பெரும் வன்முறை கட்டவிழ்த்துவிடப்பட்டது. ஆயிரக்கணக்கான சீக்கியர்கள் படுகொலை செய்யப்பட்டனர்.

நாட்டை உறைய வைத்த சீக்கியர் படுகொலை வழக்கில் காங்கிரஸ் மூத்த தலைவர்கள் ஜெகதீஷ் டைட்லர், சஜ்ஜன்குமார் ஆகியோர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இதில் டைட்லர் விடுவிக்கப்பட்டார். ஆனால் சஜ்ஜன்குமார் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டு அவர் மீது வழக்குகள் பதிவு செய்யப்ப

இந்தியாவில் கடந்த 1984ம் ஆண்டு சீக்கியர்களுக்கு எதிராக ஏற்பட்ட கலவரத்தில் தற்போது காங்கிரஸ் தலைவராக உள்ள சஜ்ஜன் குமார் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டு அவர் மீது கொலை மற்றும் வன்முறை வழக்குகள் பதிவு செய்யப்பட்டன.

இதை எதிர்த்து டெல்லி உயர்நீதிமன்றத்தில் சஜ்ஜன்குமார் மனுத்தாக்கல் செய்தார். இம்மனுவை இன்று விசாரித்த டெல்லி உயர்நீதிமன்றம் அதை தள்ளுபடி செய்து உத்தரவிட்டதுடன் அவர் மீதான வழக்கு விசாரணை தொடரும் என்றும் அறிவித்தது.

English summary
The Delhi high court on Tuesday dismissed Congress leader Sajjan Kumar's plea challenging framing of murder and rioting charges against him in a 1984 anti-Sikh riots case.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X