குஜராத்தில் 7 பேரை பலி கொண்டது காங்கோ காய்ச்சல்! ஆந்திராவில் சவூதி கரோனா பீதி!!
ஹைதராபாத்/அகமதாபாத்: குஜராத் மாநிலத்தின் அம்ரேலி மாவட்டத்தில் ‘காங்கோ காய்ச்சல்'என்ற வைரஸ் நோய்க்கு 7 பேர் பலியாகி இருக்கின்றனர். இதேபோல் ஆந்திர மாநிலத்தில் சவூதி அரேபியாவை அலற வைத்திருக்கும் கரோனா வைரஸ் பரவும் அபாயம் இருப்பதால் பீதி ஏற்பட்டுள்ளது.
குஜராத் மாநிலம் அம்ரேலி மாவட்டத்தில் திடீரென மர்ம காய்ச்சலால் பாதிக்கப்படுவோர் எண்னிக்கை அதிகரித்து உயிரிழப்பும் தொடர் கதையானது. இதைத் தொடர்ந்து நடத்தப்பட்ட பரிசோதனைகளில் ஒருவித ‘காங்கோ காய்ச்சல்' தாக்கியிருப்பது தெரியவந்துள்ளது. இதுவரை அம்ரேலி மாவட்டத்தில் 7 பேர், காங்கோ காய்ச்சலுக்குப் பலியாகி உள்ளனர்.
இதேபோல் சவூதி அரேபியாவில் கரோனா என்ற வைரஸ் நோய் பரவி 50 பேர் வரை பலியாகி உள்ளனர். அண்மையில் சவூதியில் இருந்து ஆந்திர மாநிலம் ஹைதராபாத் வந்த சபீர் என்பவர் திடீரென காய்ச்சல் ஏற்பட்டு உயிரிழந்தார். அவர் உடல் பரிசோதிக்கப்பட்டதில் சவூதி கரோனா வைரஸ் தாக்கியிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
இதைத் தொடர்ந்து சவூதியில் இருந்து வரும் பயணிகள் அனைவரும் மருத்துவ பரிசோதனைக்குள்ளாக்கப்படுகின்றனர். இன்று பன்றி காய்ச்சலை விட கொடூரமானது என்று கூறப்படுகிறது.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications