ஜார்க்கண்ட் பழங்குடியின சிறுமிகள் கற்பழிப்பு வழக்கு: 8 பேர் கைது
பாக்கூர்: ஜார்க்கண்டில் 4 பழங்குடியின சிறுமிகளை கடத்தி துப்பாக்கி முனையில் கற்பழித்த 20 பேரில் 8 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
ஜார்க்கண்ட் மாநிலம் பாக்கூர் மாவட்டம் லிதிபாராவில் உள்ள விடுதியில் தங்கியிருந்த 4 பழங்குடியின சிறுமிகள் கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு 11 மணிக்கு பயங்கர ஆயுதங்கள், துப்பாக்கியுடன் வந்த 20 பேரால் கடத்தப்பட்டனர். அந்த 20 பேர் விடுதியில் தங்கியிருந்த பள்ளியின் தலைமை ஆசிரியர்மற்றும் பிற மாணவிகளை அறைக்குள் பூட்டிவிட்டு 4 சிறுமிகளை மட்டும் கடத்தினர்.
பின்னர் அவர்கள் துப்பாக்கி முனையில் அந்த சிறுமிகளை விடுதியில் இருந்து 500 மீட்டர் தொலைவில் உள்ள இடத்தில் வைத்து கற்பழித்தனர். சுமார் 2 மணிநேரம் கழித்து அவர்கள் சிறுமிகளை மீண்டும் விடுதியில் வந்து விட்டுவிட்டுச் சென்றனர்.
இது குறித்து அறிந்த போலீசார் வழக்குப்பதிவு செய்து குற்றவாளிகளை தேடி வந்தனர். இந்நிலையில் இன்று 8 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மீதமுள்ளவர்களை தேடும் பணி நடந்து வருகிறது.
கற்பழிக்கப்பட்ட சிறுமிகள் 12 முதல் 14 வயது வரை உள்ளவர்கள். மருத்துவ பரிசோதனையில் அவர்கள் கற்பழிக்கப்பட்டது உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர்கள் பஹாரியா என்ற பழங்குடியினத்தைச் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications