மகள்களை 20 ஆண்டுகளாக பலாத்காரம் செய்த காமக்கொடூரன்: 3 வயது பேத்தியிடமும் தவறாக நடந்தான்
ஜெய்பூர்: ராஜஸ்தானில் 20 ஆண்டுகளாக மகள்களை கற்பழித்து வந்த தந்தை மற்றும் இது குறித்து அறிந்தும் கண்டுகொள்ளாத தாய் மீதும் நடவடிக்கை எடுக்கக் கோரி போலீசில் புகார் கொடுக்கப்பட்டுள்ளது.
ராஜஸ்தான் மாநிலம் பாரத்பூரைச் சேர்ந்த 62 வயது ஓய்வு பெற்ற அரசு ஊழியர் மீது அவரது மகள்கள் 2 பேர் போலீசில் புகார் கொடுத்துள்ளனர். அவருக்கு 5 மகள்கள். அதில் 2 மகள்களை அவர் கடந்த 20 ஆண்டுகளாக பலாத்காரம் செய்து வந்துள்ளார். அந்த 2 பெண்களும் 7 மற்றும் 8 வகுப்பு படிக்கும் போதில் இருந்தே தந்தையால் பலாத்காரம் செய்யப்பட்டு வந்துள்ளனர்.
பலாத்காரம் செய்யும் முன்பு அவர் மகள்களுக்கு ஆபாச படங்களை போட்டுக் காட்டுவாராம் இதில் அந்த பெண்கள் பல முறை கர்ப்பம் அடைந்துள்ளனர். அந்த 2 பெண்களுக்கும் திருமணமாகிவிட்டது. அதில் மூத்த மகள் திருமணத்திற்கு 10 நாட்களுக்கு முன்பு கருக்கலைப்பு செய்துள்ளார். தந்தையின் இந்த லீலை தெரிந்தும் அப்பெண்களின் தாய் அதை கண்டுகொள்ளவே இல்லை. தந்தையின் ஆசைக்கு இணங்க மறுத்தால் மீதமுள்ள 3 சகோதரிகளையும் சீரழிப்பேன் என்று அந்த நபர் மிரட்டி வந்துள்ளார்.
அந்த நபர் தனது மகள்கள் 2 பேரையும் ஜெய்பூர், ஆக்ரா ஆகிய இடங்களுக்கு அழைத்துச் சென்று ஹோட்டல்களில் ரூம் போட்டு பலாத்காரம் செய்துள்ளார். இந்நிலையில் அந்த பெண்கள் தாங்கள் இத்தனை ஆண்டு காலமாக பட்ட வேதனை குறித்து போலீசில் புகார் கொடுத்துள்ளனர். தங்களை சீரழித்த தந்தை மற்றும் அதை தட்டிக் கேட்காத தாய் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
அந்த நபர் மீதமுள்ள 3 மகள்களையும் பலாத்காரம் செய்தாரா என்று போலீசார் விசாரித்து வருகின்றனர். அந்த 2 சகோதரிகளில் ஒருவரின் 3 வயது மகளிடம் அந்த காமக்கொடூரன் தவறாக நடந்து கொண்டதை அடுத்து தான் அவர்கள் போலீசில் புகார் கொடுக்க முன் வந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. அவர்களின் புகாரின்பேரில் வழக்குப் பதிவு செய்த போலீசார் அந்த காமக்கொடூரனை கைது செய்தனர்.
-
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
எடப்பாடி வீட்டிற்கு வந்த எஸ்பி வேலுமணி.. சிவி சண்முகம் மட்டும் மிஸ்ஸிங்.. தனித்துவிடப்படுகிறாரா?












Click it and Unblock the Notifications