பணத்துக்காக பெற்ற மகளையே பலாத்காரம் செய்ய அனுமதித்த தாய் கைது!
தஞ்சாவூர்: 25000 ரூபாய் பணத்துக்காக பெற்ற மகளையே காமுகன் ஒருவனுக்கு இறையாக்கிவிட்டு காவல் இருந்துள்ளார் ஒரு பெண். பதறவைக்கும் இந்த சம்பவம் தஞ்சாவூர் பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தூத்துக்குடியை சேர்ந்தவர் கோமதி, இவரது கணவர் சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டார். அதன்பின் கோமதி தஞ்சாவூர் ரெட்டியார்பாளையத்தில் வசிக்கிறார். இவரது மூத்த மகள் 12ஆம் வகுப்பு படிக்கிறார். தன்னுடைய தாயின் நடவடிக்கை பிடிக்காததால் 2வது மகள் பவித்ரா தனது பெரியம்மா வீட்டில் தங்கி அதே பகுதியில் உள்ள பள்ளியில் 8ஆம் வகுப்பு படித்து வருகிறாள்.
அதே ஊரைச் சேர்ந்த டெய்லர் லெட்சுமணன் கோமதிக்கு உறவினர். இந்நிலையில் தன் மகள் பவித்ராவை திருமணம் செய்து கொடுப்பதாக கூறி லெட்சுமணனிடமிருந்து 25,000 ரூபாய் வாங்கியுள்ளார் கோமதி.
இந்த திருமணத்திற்கு பவித்ரா சம்மதிக்கவில்லை. படித்து டாக்ராகவேண்டும் என்றும் கூறியுள்ளார். ஆனால் கோமதியோ,இதற்கு மேல் உன்னை என்னால் படிக்க வைக்க முடியாது, ஒழுங்காக என் பேச்சைக் கேட்டு திருமணத்திற்கு ஒத்துக்கொள் என்று தினமும் கட்டாயப்படுத்தி வந்திருக்கிறார்.
இந்நிலையில், உன் மகளை எனக்கு திருமணம் செய்து கொடு அல்லது பணத்தை திருப்பி கொடு என்று லட்சுமணன் ஒரு புறம் டார்ச்சர் செய்து வந்தாராம். இதையடுத்து கடந்த 7ஆம் தேதி திருச்செந்தூர் முருகன் கோவிலில் திருமணம் செய்ய ஏற்பாடுகள் செய்யப்பட்டது.
மைனர் பெண்ணிற்கு திருமணம் நடப்பதாக போலீசில் புகார் செய்யப்பட்டதை அடுத்து போலீசார் தடுத்து நிறுத்தி எச்சரித்து அனுப்பியுள்ளனர்.தனது திட்டம் நிறைவேறாததால் ஆத்திரமடைந்த கோமதி, என் வீட்டுக்கு வந்து என் மகளை பலாத்காரம் செய்து விடு. வேறு வழியில்லாமல் உன்னை திருமணம் செய்ய சம்மதித்து விடுவாள் என்று லெட்சுமணனுக்கு ஐடியா கூறியுள்ளார்.
அதன்படி, கடந்த 9ஆம் தேதி இரவு கோமதி வீட்டுக்கு வந்த லெட்சுமணனை, பவித்ராவின் அறைக்கு அனுப்பிவிட்டு வெளிப்பக்கமாக கதவை தாழிட்டுக் காவலுக்கு உட்கார்ந்திருக்கிறார் கோமதி. உள்ளே சென்ற லெட்சுமணன் சிறுமியை கத்தி முனையில் மிரட்டி வாயைப் பொத்தி பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.
மறுநாள் காலை நடந்த சம்பவத்தை தன் உறவினர்களிடம் சிறுமி கூறியிருக்கிறார். அவர்கள், விஷயம் வெளியே தெரிந்தால் மாணவியின் எதிர்காலம் பாதிக்கப்படும் என்று யாரிடமும் சொல்லாமல் இருந்துள்ளனர்.
தகவல் அறிந்த சைல்டு லைன் அதிகாரிகள் நேரில் வந்து விசாரித்துவிட்டு உடனே தஞ்சை எஸ்.பி. தர்மராஜிடம் புகார் கொடுத்துள்ளனர். எஸ்.பி. உத்தரவின் பேரில் மகளிர் காவல் நிலைய போலீசார், கோமதி மற்றும் பலாத்காரம் செய்த லெட்சுமணன் ஆகியோரை கைது செய்துள்ளனர். சிறுமியை மருத்துவ பரிசோதனைக்காக தஞ்சை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
பணத்திற்காக பெற்ற மகளையே காமுகன் ஒருவனுக்கு இரையாக்கிய பெண்ணை நினைத்து தஞ்சாவூர் பகுதி மக்கள் அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ளனர்.
-
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்!












Click it and Unblock the Notifications