பாரதிய ஜனதாவுக்காக இஃப்தார் விருந்தை ரத்து செய்தார் முதல்வர் ஜெ.?

அதிமுக எம்.எல்.ஏ.பெருமாளின் மரணத்தைத் தொடர்ந்து இஃப்தார் விருந்து ரத்து செய்யப்படுவதாக முதல்வர் ஜெயலலிதா அறிவித்திருக்கிறார். ஆனால் சேலத்தில் பாஜக மாநில செயலர் ஆடிட்டர் ரமேஷ் கொலை விவகாரம் ஆறிப்போய்விடவில்லை. அது தேசிய பிரச்சனையாக்கப்பட்டுவிட்டது.
தமிழகத்தில் இந்து தலைவர்களுக்கு பாதிப்பில்லை என்கிற பிரசாரம் முன்னெடுக்கப்பட்டுவிட்டது. நரேந்திர மோடி, வெங்கய்யா நாயுடு என பெரிய பாஜக தலைவர்களும் களத்தில் இறங்கினர். இதில் அத்வானியும் சேலம் வருகிறார், ஆடிட்டர் குடும்பத்துக்கு ஆறுதல் தெரிவிக்க.
அதிமுகவைப் பொறுத்தவரையில் பாரதிய ஜனதா கட்சிக்கு மிக நெருக்கமான நட்பு கட்சியாகவே இருந்து வருகிறது. ஆடிட்டர் ரமேஷ் கொலையைக் கண்டித்து பேசிய பாஜக தலைவர்கள் பலருமே அதிமுக அரசுக்கு வலித்துவிடாமலே கருத்து தெரிவித்தனர். லோக்சபா தேர்தலிலும் பாஜகவுடன் அதிமுக கை கோர்க்க வாய்ப்பிருக்கிறது.
மேலும் அதிமுக கூட்டணியில் இருந்த இஸ்லாமிய கட்சியான மனித நேய மக்கள் கட்சியும் ராஜ்யசபா தேர்தலில் கனிமொழிக்கு ஆதரவு தந்து திமுக பக்கம் போய்விட்டது.
இந்த நிலையில் தான் இஃப்தார் விருந்தையே பேசாமல் கேன்சல் செய்துவிடுவது என்ற முடிவுக்கு முதல்வர் ஜெயலலிதா வந்திருக்கலாம் என்கிறார்கள்.


Click it and Unblock the Notifications
