டெல்லி கற்பழிப்பு வழக்கு: குற்றவாளிகளில் இருவர் பஸ்ஸில் இல்லை என்று காட்டும் வீடியோ
டெல்லி: டெல்லியில் பிஸியோதெரபி மாணவியை கற்பழித்ததாக குற்றம்சாட்டப்பட்டுள்ள 6 பேரில் 2 பேர் சம்பவம் நடந்தபோது இசை நிகழ்ச்சியில் இருந்ததாக 15 வயது சிறுவன் ஒருவர் நீதிமன்றத்தில் வீடியோ ஆதாரத்தை அளித்துள்ளார்.
கடந்த டிசம்பர் மாதம் 16ம் தேதி டெல்லியில் ஓடும் பேருந்தில் 23 வயது பிஸியோதெரபி மாணவி 1 மைனர் உள்பட 6 பேரால் கற்பழிக்கப்பட்டு தாக்கப்பட்டதில் பலியானார். இந்த வழக்கில் பேருந்து ஓட்டுனர் ராம் சிங், வினய் சர்மா, பவன் குப்தா, அக்ஷய், முகேஷ் மற்றும் மைனர் ஆகிய 6 பேரும் கைது செய்யப்பட்டனர். இதில் ராம் சிங் கடந்த மார்ச் மாதம் 11ம் தேதி திகார் சிறையில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இந்நிலையில் இந்த வழக்கு விசாரணையின்போது 15 வயது சிறுவன் ஒருவர் நீதிமன்றத்தில் ஆஜராகி வீடியோ ஆதாரம் ஒன்றை சமர்பித்தார். அந்த வீடியோவின்படி குற்றவாளிகளில் வினய் சர்மா மற்றும் பவன் குப்தா ஆகியோர் சம்பவம் நடந்தபோது பேருந்தில் இல்லை என்றும், அப்போது அவர்கள் தெற்கு டெல்லியில் நடந்த இசை நிகழ்ச்சியில் இருந்தனர் என்றும் தெரிவிக்கப்பட்டது.
சிறுவன் போலியான ஆதாரங்களை தயார் செய்து சமர்பித்துள்ளதாக அரசின் சிறப்பு வழக்கறிஞர் தயான் கிருஷ்ணன் தெரிவித்தார். ஆனால் சிறுவனோ தான் பொய் சொல்லவில்லை என்றும், இது கடவுள் மீது சத்தியமாக உண்மை என்றும் தெரிவித்தார்.
தெற்கு டெல்லியில் உள்ள பார்க்கில் கடந்த ஆண்டு டிசம்பர் 16ம் தேதி மாலை எந்த இசை நிகழ்ச்சியும் நடக்கவில்லை என்றும், இரவு 7 மணிக்கு மேல் பார்க்கில் இருக்க யாருக்கும் அனுமதி இல்லை என்றும் அரசு தரப்பில் வாதிடப்பட்டது.
அந்த பார்க்கில் சம்பவம் நடந்த அன்று எந்த இசை நிகழ்ச்சியும் நடக்கவில்லை என்பதை நிரூபிக்க 3 பேரை விசாரிக்க போலீசார் அனுமதி கோரியுள்ளனர்.
-
சென்னை சூட்கேஸில் தலை இல்லாத சடலம்... இப்படி ஒரு பெண்ணா? பார்கோடு தந்த மரண துப்பு.. அலறிய பெரம்பூர் -
ஸ்டாலின் காங்கிரஸுக்கு தந்த பவர்புல் ஷாக்! பாஜகவும் இல்லை.. அப்ப தேசிய அரசியலில் திமுகவின் ரூட் என்ன -
அதெப்படி திமிங்கலம்.. தமிழ்நாட்டிற்கு வரவேண்டிய ஒப்பந்தம் வரிசையா.. கரெக்ட்டா ஆந்திராவுக்கு போகுது! -
டெல்லியில் இந்தியா கூட்டணி ஆலோசனை.. திமுக, ஆம் ஆத்மி புறக்கணிப்பு.. வைகோ, திருமாவளவன் பங்கேற்பு -
மாதம் 2500 மகளிர் உரிமை தொகை தருவதற்கு தமிழக அரசுக்கு எவ்வளவு பணம் தேவை.. அரசுக்கு மாற்று வழிகள் -
கேஸ் சிலிண்டர் விலை ரூ.1,600.. விலை உயர்வை அறிவித்த கையோடு.. மத்திய அரசு சொன்ன முக்கியமான பாயிண்டு -
மீண்டும் சொதப்பிய திமுக.. திணறுகிறார்களே.. லாவகமாக நர்ரேட்டிவ் செட் செய்த விஜய்.. கவனிச்சீங்களா? -
இன்னும் சில மணி நேரம் தான்.. பூமியை நோக்கி வரும் 'சூரிய புயல்'! மெகா அலர்ட் கொடுத்த நாசா -
மாரிதாஸ் கைது தவறு ஏன்.. உச்ச நீதிமன்றத்தின் இரண்டு பாயிண்டுடன் இன்பத்துரை விளக்கம் -
ஸ்டாலின் உடனே கொடுத்த கிரீன் சிக்னல்.. விஜய்யை மதிமுக துரை வைகோ சந்தித்த அடுத்த நிமிடமே அதிரடி? -
மினி பஸ்சில் லைட்டை ஆப் செய்து.. 45 நிமிடம் அட்டகாசம்! கிளம்பும்போது கோவை ஜோடி எடுத்து சென்ற பொருள்? -
கோவையில் கிழியுது இரட்டை இலை..வேலையைக் காட்டிய வேலுமணி! அழுகையை அடக்க முடியாமல் மா.செ.! ரொம்ப மோசம்!












Click it and Unblock the Notifications