ஈரான் சிறையில் வாடும் 16 தமிழக மீனவர்களை மீட்டுத் தாருங்கள்: பிரதமருக்கு ஜெயலலிதா கடிதம்

இது குறித்து அவர் பிரதமருக்கு எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது,
தமிழ்நாட்டில் ராமநாதபுரம், நாகப்பட்டினம், கன்னியாகுமரி மாவட்டங்களைச் சேர்ந்த 16 மீனவர்கள் ஈரான் ஜெயிலில் அடைக்கப்பட்டு வாடி வருவது பற்றி உங்கள் கவனத்திற்கு கொண்டு வருகிறேன். கைது செய்யப்பட்ட அந்த மீனவர்களின் குடும்பத்தினர் கடந்த 24-ம் தேதி எனக்கு மனு அனுப்பி எனது கவனத்திற்கு இந்த விஷயத்தை கொண்டு வந்தனர்.
மீனவர்களை விடுதலை செய்ய தேவையான ஏற்பாடுகளை செய்ய என்னிடம் கேட்டுக் கொண்டனர். ஜெயிலில் வாடும் அந்த மீனவர்கள்தான் அவர்களின் குடும்பத்தில் சம்பாதிக்கும் நபர்கள் ஆவார்கள். அந்த மீனவர்கள் சவுதி அரேபியா நாட்டில் தனியார் நிறுவன மீன்பிடி படகில் ஒப்பந்த ஊழியர்களாக பணியாற்றி வந்துள்ளனர்.
2012-ம் ஆண்டு டிசம்பர் மாதம் அந்த படகில் சென்று ஈரான் கடல் பகுதியில் மீன் பிடித்தனர். இதனால் அவர்கள் கைது செய்யப்பட்டு ஈரான் ஜெயிலில் அடைக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு ஈரான் கோர்ட்டு 6 மாதம் ஜெயில் தண்டனையும், தலா 5 ஆயிரத்து 750 அமெரிக்க டாலர் (இந்திய பண மதிப்பு ரூ.3 லட்சத்து 30 ஆயிரம்) அபராதமும் விதித்துள்ளது. அவர்கள் 6 மாத ஜெயில் தண்டனையை முடித்து விட்டார்கள். ஆனால் அபராத பணத்தை கட்ட முடியாததால் தொடர்ந்து ஜெயிலிலேயே அடைக்கப்பட்டுள்ளனர்.
அவர்கள் இந்திய தூதரகத்தை தொடர்பு கொள்ள முயற்சித்துள்ளனர். ஆனால் அது முடியவில்லை. இந்திய தூதரகமும் அவர்கள் விடுதலைக்காக எந்த முயற்சியும் எடுக்கவில்லை. அவர்களை தொடர்பு கொள்ளவும் இல்லை. சட்ட உதவியும் செய்யவில்லை. அவர்கள் வேலை செய்த கம்பெனியை அபராத தொகையை செலுத்த வைக்கவும் முயற்சி செய்யவில்லை.
எனவே இந்த விஷயத்தை உங்கள் கவனத்திற்கு கொண்டு வருகிறேன். நீங்கள் உடனடியாக தலையிட்டு டெஹ்ரானில் உள்ள இந்திய தூதரகத்துக்கு உரிய உத்தரவுகளை பிறப்பிக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். உரிய சட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டு தமிழ்நாட்டை சேர்ந்த அந்த ஏழை மீனவர்களை மீட்டுத்தர வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.
மேலும் நீங்கள் சவுதி அரேபியாவில் உள்ள இந்திய தூதரகத்திடம் மீனவர்களுக்கான அபராத தொகையை செலுத்த வைக்கவும், அவர்களை விரைவில் விடுவிக்கவும் உரிய உத்தரவுகளை பிறப்பிக்க வேண்டும். நீங்கள் உடனடியாக தூதரக ரீதியாக நடவடிக்கை எடுத்து தமிழக மீனவர்கள் 16 பேரையும் விடுவிக்க ஏற்பாடு செய்ய வேண்டும் என்று மீண்டும் கேட்டுக்கொள்கிறேன் என்று அவர் அதில் தெரிவித்துள்ளார்.
-
அதெப்படி திமிங்கலம்.. தமிழ்நாட்டிற்கு வரவேண்டிய ஒப்பந்தம் வரிசையா.. கரெக்ட்டா ஆந்திராவுக்கு போகுது! -
டெல்லியில் இந்தியா கூட்டணி ஆலோசனை.. திமுக, ஆம் ஆத்மி புறக்கணிப்பு.. வைகோ, திருமாவளவன் பங்கேற்பு -
மாதம் 2500 மகளிர் உரிமை தொகை தருவதற்கு தமிழக அரசுக்கு எவ்வளவு பணம் தேவை.. அரசுக்கு மாற்று வழிகள் -
கேஸ் சிலிண்டர் விலை ரூ.1,600.. விலை உயர்வை அறிவித்த கையோடு.. மத்திய அரசு சொன்ன முக்கியமான பாயிண்டு -
மீண்டும் சொதப்பிய திமுக.. திணறுகிறார்களே.. லாவகமாக நர்ரேட்டிவ் செட் செய்த விஜய்.. கவனிச்சீங்களா? -
இன்னும் சில மணி நேரம் தான்.. பூமியை நோக்கி வரும் 'சூரிய புயல்'! மெகா அலர்ட் கொடுத்த நாசா -
மாரிதாஸ் கைது தவறு ஏன்.. உச்ச நீதிமன்றத்தின் இரண்டு பாயிண்டுடன் இன்பத்துரை விளக்கம் -
ஸ்டாலின் உடனே கொடுத்த கிரீன் சிக்னல்.. விஜய்யை மதிமுக துரை வைகோ சந்தித்த அடுத்த நிமிடமே அதிரடி? -
மினி பஸ்சில் லைட்டை ஆப் செய்து.. 45 நிமிடம் அட்டகாசம்! கிளம்பும்போது கோவை ஜோடி எடுத்து சென்ற பொருள்? -
கோவையில் கிழியுது இரட்டை இலை..வேலையைக் காட்டிய வேலுமணி! அழுகையை அடக்க முடியாமல் மா.செ.! ரொம்ப மோசம்! -
கஜானாவை நிரப்ப விஜய் அதிரடி நடவடிக்கை.. டாஸ்மாக் விதித்த கூடுதல் கட்டணம்.. மதுபான விலை உயர்வு? -
ராகுலுக்கு ஷாக் கொடுத்த திமுக! INDIA கூட்டணி தலைவர்களுடன் இடம்பெற்ற பேனர்.. காங். இதை எதிர்பார்க்கல!












Click it and Unblock the Notifications