''கண் அசையுது.. கால் அசையுது.. நாகராஜ் இன்னும் சாகலை''... அமைச்சர் செய்த களேபரம்!

ஆனால் உண்மையில் அந்தப் பிரமுகர் இறந்து பல மணி நேரமாகி விட்டிருந்ததால், அமைச்சர் பேச்சால் இறந்தவர் வீட்டுக்கு வந்திருந்தவர்கள் டென்ஷனாகி விட்டார்கள்.
ராஜபாளையம் நகராட்சியின் 15வது வார்டு அதிமுக கவுன்சிலர் நாகராஜ்.அவருக்கு உடல் நலம் இல்லாமல் சீரியஸான நிலையில் டாக்டர் கோவிந்தராஜிடம் கொண்டு போயுள்ளனர். அவர் நாகராஜைப் பரிசோதித்து விட்டு பல்ஸ் சுத்தமாக இல்லை, வீட்டுக்குக் கொண்டு போய் விடுங்கள் என்று கூறியுள்ளார். இதையடுத்து நாகராஜை வீட்டுக்குக் கூட்டி வந்துள்ளனர். அங்கு அவர் இறந்துள்ளார்.
இதையடுத்து ஐஸ் பெட்டிக்குள் வைக்கப்பட்ட உடலை வீட்டில் அஞ்சலிக்காக வைத்தனர். பலரும் வந்து அஞ்சலி செலுத்தினர். அதேபோல அமைச்சர் ராஜேந்திர பாலாஜியும் வந்தார். வந்தவர் மாலை போட்டபோது, திடீரென நாகராஜ் இன்னும் சாகல. கண் அசையுது. கால் அசையுது என்று கூற உடனே பரபரப்பாகி விட்டது நாகராஜின் வீடு.
உடனடியாக நாகராஜ் உடலை அரசு மருத்துவமனைக்கு அனுப்ப உத்தரவிட்டார் அமைச்சர். உறவினர்களும் தூக்கிக் கொண்டு ஓடினர். அங்கு பணியில் இருந்த டாக்டர் பொன்னுச்சாமி, ஒரு மணி நேரத்திற்கு முன்புதான் இறந்துள்ளார். முன்பே கொண்டு வந்திருந்தால் காப்பாற்றியிருக்கலாமே என்று கூற அவ்வளவுதான் உறவினர்கள் டென்ஷனாகி விட்டனர்.
டாக்டர் கோவிந்தராஜ் மீது கோபம் கொண்டு அவரைத் தேடிப் போனார்கள். அவரிடம் ஆவேசமாக பேசியுள்ளனர். அதை கேட்ட டாக்டர் கோவிந்தராஜ், ,அமைதியாக, பல்ஸ் சுத்தமா இல்லை. உயிர் போவதற்கு முன்பு வீட்டுக்கு கொண்டு போயிருங்கன்னு சொன்னேன். அவர் உங்கள் வீட்டில் வைத்துதான் இறந்துள்ளார். நீங்கதானே உடம்பை குளிப்பாட்டி ஐஸ் பெட்டிக்குள்ள வச்சிருக்கீங்க.. இப்ப என்னை குற்றம் சொன்னா எப்படி என்று நறுக்கென கேட்டார்.
இதற்குப் பதில் சொல்ல முடியாமல் தவித்த உறவினர்கள் பேசாமல திரும்பிப் போய் விட்டனர்.
பாவம், அமைச்சர் அவராகவே கன்பியூஸ் ஆகிட்டார் போல...!
-
ஸ்டாலின் காங்கிரஸுக்கு தந்த பவர்புல் ஷாக்! பாஜகவும் இல்லை.. அப்ப தேசிய அரசியலில் திமுகவின் ரூட் என்ன -
அதெப்படி திமிங்கலம்.. தமிழ்நாட்டிற்கு வரவேண்டிய ஒப்பந்தம் வரிசையா.. கரெக்ட்டா ஆந்திராவுக்கு போகுது! -
டெல்லியில் இந்தியா கூட்டணி ஆலோசனை.. திமுக, ஆம் ஆத்மி புறக்கணிப்பு.. வைகோ, திருமாவளவன் பங்கேற்பு -
மாதம் 2500 மகளிர் உரிமை தொகை தருவதற்கு தமிழக அரசுக்கு எவ்வளவு பணம் தேவை.. அரசுக்கு மாற்று வழிகள் -
கேஸ் சிலிண்டர் விலை ரூ.1,600.. விலை உயர்வை அறிவித்த கையோடு.. மத்திய அரசு சொன்ன முக்கியமான பாயிண்டு -
மீண்டும் சொதப்பிய திமுக.. திணறுகிறார்களே.. லாவகமாக நர்ரேட்டிவ் செட் செய்த விஜய்.. கவனிச்சீங்களா? -
இன்னும் சில மணி நேரம் தான்.. பூமியை நோக்கி வரும் 'சூரிய புயல்'! மெகா அலர்ட் கொடுத்த நாசா -
மாரிதாஸ் கைது தவறு ஏன்.. உச்ச நீதிமன்றத்தின் இரண்டு பாயிண்டுடன் இன்பத்துரை விளக்கம் -
ஸ்டாலின் உடனே கொடுத்த கிரீன் சிக்னல்.. விஜய்யை மதிமுக துரை வைகோ சந்தித்த அடுத்த நிமிடமே அதிரடி? -
மினி பஸ்சில் லைட்டை ஆப் செய்து.. 45 நிமிடம் அட்டகாசம்! கிளம்பும்போது கோவை ஜோடி எடுத்து சென்ற பொருள்? -
கோவையில் கிழியுது இரட்டை இலை..வேலையைக் காட்டிய வேலுமணி! அழுகையை அடக்க முடியாமல் மா.செ.! ரொம்ப மோசம்! -
கஜானாவை நிரப்ப விஜய் அதிரடி நடவடிக்கை.. டாஸ்மாக் விதித்த கூடுதல் கட்டணம்.. மதுபான விலை உயர்வு?












Click it and Unblock the Notifications