குளுகுளு குற்றாலத்தில் தொடங்கியது சாரல் விழா

Subscribe to Oneindia Tamil

குற்றாலம்: உலக அளவில் குற்றாலம் பெயர் பெறப்போவது நிச்சயம் எனவும், மணிமுத்தாறு அணையில் பழமைவாய்ந்த பூங்கா ரூ.1கோடிசெலவில் சுற்றுலாத்துறை மூலம் புதுப்பிக்கப்படுமெனவும் சுற்றுலாத்துறை அமைச்சர் சண்முகநாதன் தெரிவித்தார்.

குற்றால சாரல் விழா நேற்று கலைவாணர் கலையரங்கில் துவங்கியது. தமிழக இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் செந்தூர்பாண்டியன் தலைமை வகித்தார்.

மாவட்ட கலெக்டர் சமயமூர்த்தி வரவேற்றார். விழாவில் தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக்கழக தலைவர் அருண்மொழிதேவன், தமிழ்நாடு வீட்டு வசதிவாரிய தலைவர் முருகையாபாண்டியன், எம்.எல்.ஏ.,க்கள் துரையப்பா, முத்துசெல்வி, முன்னாள் எம்.எல்.ஏ., சக்திவேல், உட்பட பலர் பேசினர்.

சாரல் திருவிழாவிற்கு தலைமை வகித்து அமைச்சர் செந்தூர்பாண்டியன் பேசியதாவது:

சிறப்பு ஏற்பாடுகள்

சிறப்பு ஏற்பாடுகள்

இந்த ஆண்டு சாரல் மிகவும் சிறப்பாக இருந்து வருகிறது. விழாவை நடத்த மாவட்ட நிர்வாகம் இதுவரையில்லாத அளவிற்கு சிறப்பு ஏற்பாடுகளை செய்து வருகிறது.

பழக் கண்காட்சி

பழக் கண்காட்சி

குற்றாலத்தின் சிறப்புகளை சுற்றுலா பயணிகள் அறிந்திடும் வகையில் நடப்பாண்டு மூலிகை, கார், பழக்கண்காட்சிகள் நடத்திட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. குற்றாலத்திற்கு வரும் சுற்றுலா பயணிகளுக்கு சிறப்பான
பாதுகாப்பு வசதி மேற்கொள்ளப்பட்டுள்ளது என தெரிவித்தார்.

இந்த ஆண்டுதான் சாரல் மழை அதிகம்

இந்த ஆண்டுதான் சாரல் மழை அதிகம்

சாரல் திருவிழாவை துவக்கி வைத்து தமிழக சுற்றுலாத்துறை அமைச்சர் சண்முகநாதன் பேசுகையில், குற்றாலத்தில் சாரல் திருவிழா கடந்த 30 ஆண்டுகளாக சிறப்பாக நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது. இருந்தபோதிலும் இந்த ஆண்டுதான் சாரல்மழை பெய்து அருவிகளில் தண்ணீர்வரத்து அதிகரித்ததாக தெரிவித்தனர். குற்றாலம் என்றாலே சாரல்தான். இந்த சாரல் எப்போது வரும் என்ற பேச்சு தமிழகம் மற்றும் அண்டை மாநிலம், உலகத்தில் ஒரே பேச்சாக இருந்து வருகிறது.

உடலுக்கு நல்லது

உடலுக்கு நல்லது

மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் மழை பெய்யதுவங்கி அங்குள்ள மூலிகையில் மழைத்துளிகள் பட்டு அந்த தண்ணீர் அருவியில் கொட்டுகிறது. அதில் குளிக்கும்போது உடல் நலம் சிறப்பாக இருப்பதாகவும் தெரிவிக்கின்றனர்.

உலக அளவில் சிறந்த குற்றாலம்

உலக அளவில் சிறந்த குற்றாலம்

உலக அளவில் எடுத்துக் கொண்டால் குற்றாலம் சிறப்பு பெற்ற பகுதியாக அமைந்துள்ளது. அந்த அளவிற்கு அதன் பெருமை சுற்றுலா பயணிகள் மத்தியில் கவரப்பட்டுள்ளது. சுற்றுலாத்துறை மூலமாக குற்றாலத்தில் அருவிப்பகுதிகளில் பணிகள் ஏதேனும் நடத்தப்படவேண்டுமென்றால் அதற்கு சுற்றுலாத்துறை நிதிஒதுக்கீடு செய்ய தயாராக உள்ளது. சுற்றுலா பயணிகள் அதிகமாக வரும் பகுதிகளில் அவர்களின் தேவைக்கு அதிக வசதிகள் செய்து கொடுக்க முதல்வர் ஜெயலலிதா சுற்றுலா தலங்களுக்கு அதிக நிதிஒதுக்கீடு செய்துள்ளார்.

மணிமுத்தாறு அணைப் பூங்கா

மணிமுத்தாறு அணைப் பூங்கா

நெல்லை மாவட்டம் மணிமுத்தாறு அணைப்பகுதியில் பழமை வாய்ந்த பூங்கா அமைந்திருப்பதாகவும், இந்த பூங்காவில் விழாக்காலங்கள் நடக்கும்போது பொதுமக்கள் இங்கு அதிகளவில் வந்து சென்றதாகவும் தெரிவித்தனர். தற்போது அந்த பூங்காவினை புதுப்பித்து பழயை நிலையை கொண்டுவர திட்டமதிப்பீடு ரூ.90லட்சத்திற்கு தயார் செய்திருப்பதாக மாவட்ட கலெக்டர் தெரிவித்தார்.

புதுப்பிக்க ரூ. 1 கோடி

புதுப்பிக்க ரூ. 1 கோடி

இந்த பூங்காவினை புதுப்பிக்க 1கோடி ரூபாய் சுற்றுலாத்துறை மூலம் ஒதுக்கீடு செய்யப்படும். ஏற்கனவே சுற்றுலாத்துறை மூலம் சங்கரன்கோயிலில் தலமேம்பாட்டு நிதியாக 60லட்சமும், பொட்டல்புதூரில் 36லட்சமும், ஆய்க்குடி பாலசுப்பிரமணியசுவாமி கோயிலில் ரூ.25லட்சம் செலவிலும், தூத்துக்குடி மாவட்டத்தில் நவதிருப்பதி கோயில்களில் 2கோடியே 30லட்சம் செலவில் சுற்றுலாத்துறை மூலமாக தலமேம்பாட்டு நிதிமூலம் பணிகள் நடத்தப்பட்டுள்ளது.

குற்றாலத்தைக் காப்போம்

குற்றாலத்தைக் காப்போம்

எனவே குற்றாலத்தை பொறுத்தவரை இங்குள்ள மலை அழகு, மூலிகை மகத்துவம் பெற்றது, ஆன்மிக அற்புதம் கொண்ட பகுதி, இயற்கை எழில் சேர்க்கும் வளம் பெற்ற பகுதியாக விளங்கும் குற்றாலத்தில் வனத்தை பாதுகாப்போம், சுகாதாரத்தை கடைபிடிப்போம் என்று அவர் பேசினார்.முடிவில் சுற்றுலா அலுவலர் மாலையா நன்றி கூறினார்.

தினசரி கண்காட்சி- போட்டிகள்

தினசரி கண்காட்சி- போட்டிகள்

சாரல் திருவிழாவை முன்னிட்டு ஒவ்வொரு நாளும் கண்காட்சிகள் மற்றும் போ்ட்டிகள் நடத்தப்படுகிறது.28ம் தேதிகாலை நீச்சல் போட்டியும், காலை 11 மணிக்கு சுற்று சூழல் பூங்காவில் காய்கறி மற்றும் பழக் கண்காட்சியும், 29ம் தேதி காலை 10 மணிக்கு படகு போட்டியும், 30ம் தேதி காலை 11 மணிக்கு சுற்று சூழல் பூங்காவில் மலர் கண்காட்சியும், மாலை 3 மணிக்கு ஆணழகன் போட்டியும் நடைபெறும.

நாய்க் கண்காட்சி

நாய்க் கண்காட்சி

31ம் தேதி காலை 3 மணிக்கு நாய் கண்காட்சி, ஆகஸ்ட் 1ம் தேதி காலை10 மணிக்கு கோலப்போட்டி, 11 மணிக்கு சுற்றுசூழல் பூங்காவில் வாசனை மற்றும் சுவையூட்டும் பொருட்கள் கண்காட்சி, 2ம் தேதி மாலை 3 மணிக்கு பரம்பாரிய.கார்கண்காட்சி, மாலை 6 மணிக்கு சாரல் திருவிழா நிறைவு விழா நடக்கிறது. விழாவில் தினமும் மாலையில் ஆடல், பாடல், நாட்டியும், நாட்டுப்புற கலைகள், வெளிமாநில குழுவினரின் பல்சுவை நிகழ்ச்சிகள் நடக்கிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+