கூடங்குளம் அணு உலை பணிகள் திடீர் நிறுத்தம்

நெல்லை மாவட்டம் கூடங்குளத்தில் ரூ.13500 கோடி மதிப்பீட்டில் இந்தியா-ரஷ்யா கூட்டு முயற்சியுடன் தலா 1000 மெகா வாட் மின் உற்பத்தி திறனுள்ள இரண்டு அணு உலைகள் அமைக்கப்பட்டுள்ளன.
முதல் அணு உலையில் மின் உற்பத்தியை தொடங்க அணுசக்தி ஒழுங்கு முறை வாரியம் கடந்த 11ம் தேதி அனுமதி அளித்தது. இதை தொடர்ந்து அன்று நள்ளிரவு 11.58 மணிக்கு மின் உற்பத்திக்கான ஆயத்தபணிகள் தொடங்கியது. ஜூலை 13ம் தேதி முதல் அணு உலை இயங்க தொடங்கியது.
முதல் அணு உலையின் மூலம் 400 மெகா வாட் மின்சாரம் உற்பத்தி செய்ய ஒரு மாதமாகும் என அணு மின் நிலைய அதிகாரிகள் தெரிவித்தனர். முதல் அணு உலையில் அணு தொடர் பிளவுகளை இந்திய அணு சக்தி துறை, ரஷ்ய விஞ்ஞானிகள் கடந்த 10 நாட்களுக்கும் மேலாக கண்காணித்து வருகின்றனர்.
இந்நிலையில் முதல் அணு உலையில் நடைபெற்று வந்த தொடர் வினைகள் நிறுத்தப்பட்டுளளது.
இது குறித்து கூடங்குளம் அணு மின் நிலைய வளாக இயக்குனர் சுந்தர் கூறுகையில், முதல் அணு உலையில் நடைபெற்று வந்த தொடர் வினைகள் சோதனை முடிவுகளுக்காக நிறுத்தப்பட்டுள்ளன. இந்த முடிவுகள் புள்ளி விபரங்களாக தொகுக்கப்படும். இது வழக்கமான ஒன்றுதான் என்றார். அடுத்த 3 நாட்களில் மீண்டும் அணு உலை இயக்கப்பட உள்ளது என்றார்.
-
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
மேகதாதுவில் அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை.. கர்நாடக முதல்வரானதும் டிகே சிவக்குமார் பேச்சு -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள், பார்களை தனியாரிடம் ஒப்படைக்க திட்டம்? விஜய் எடுக்க போகும் முடிவு? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்! -
தவெக அரசின் முதல் பிரம்மாண்ட முதலீடு: எல் அண்ட் டி உடன் ₹18,600 கோடி ஒப்பந்தம்.. 8,200 வேலைவாய்ப்பு!












Click it and Unblock the Notifications