130 கிலோ எடை கொண்டவர்களெல்லாம் நியூசிலாந்தில் வாழ உரிமை கிடையாதாம்!
வெல்லிங்டன்: கூடை வச்சிருக்கிற பொண்ணுங்களுக்கெல்லாம் பெட்ரோமாக்ஸ் லைட் தர முடியாது என்று கவுண்டமணி ஒரு படத்தில் வசனம் பேசுவார். அதே ஸ்டைலில் நியூசிலாந்து நாடும் தற்போது செயல்பட ஆரம்பித்துள்ளது.
அதாவது அதிக எடை கொண்ட வெளிநாட்டவர்களை அங்கு தங்க முடியாது என்று கூறி நாடு கடத்தும் நடவடிக்கையில் நியூசிலாந்து நாடு இறங்கியுள்ளது.
இந்த உத்தரவால் தென் ஆப்பிரிக்காவைச் சேர்ந்த 130 கிலோ எடை கொண்ட ஆல்பர்ட் பியூட்டன்ஹீஸ் என்பவர் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளார். நாட்டை விட்டு வெளியேறவும் அவர் உத்தரவிட்டுள்ளார்.

6 வருடத்திற்கு முன்பு
6 வருடத்திற்கு முன்பு நியூசிலாந்தில் வந்து பணி நிமித்தமாக குடியேறினார் ஆல்பர்ட். ஆனால் வந்த பிறகு அவருக்கு உடல் எடை கூறி விட்டது.

கஷ்டப்பட்டு எடையைக் குறைத்தும்
இதையடுத்து மிகக் கடுமையாக உடற்பயிற்சி செய்து, டயட்டைக் கடைப்பிடித்து 30 கிலோ வரை எடையைக் குறைத்தார்.

ஆனால் அது போதாதே...
தற்போது அவரது எடை 130 கிலோவாக உள்ளது. இது ஓவர் வெயிட், உங்களால் நியூசிலாந்தில் தங்க முடியாது, உங்களது பணி விசாவைப் புதுப்பிக்க முடியாது. நீங்க கெளம்புங்க என்று ஓலை விடுத்துள்ளது நியூசிலாந்து குடியேற்றத் துறை.

ஏற்றுக் கொள்ளும்படியான சுகாதாரம் இல்லையாம்
இதுகுறித்து நியூசிலாந்து குடியேற்றத்துறையினர் கூறுகையில், ஏற்றுக் கொள்ளும்படியான சுகாதாரத்துடன் ஆல்பர்ட் இல்லை என்று டாக்டர்கள் குழு தெரிவித்துள்ளது. எனவே அவர் தொடர்ந்து இங்கு தங்க முடியாது என்று கூறியுள்ளது.

வருத்தத்தில் ஆல்பட்ட்டும், மனைவியும்
நியூசிலாந்து குடியேற்றத் துறையின் இந்தப் புதிய உத்தரவால் ஆல்பர்ட்டும், அவரது மனைவியும் கடும் ஏமாற்றம் மற்றும் வருத்தத்தில் உள்ளனர்.

வந்தப்ப 160 கிலோ
இதுகுறித்து அவரது மனைவி கூறுகையில், ஆல்பர்ட் இங்கு வந்தபோது 160 கிலோ எடையுடன் இருந்தார். ஆனால் வந்த பின்னர் கடுமையாக போராடி 30 கிலோ வரை குறைத்தார். அப்போது விட்டு விட்டு எடை குறைந்த பின்னர் வெளியேறச் சொல்வது என்ன நியாயம் என்றார்.
-
அதெப்படி திமிங்கலம்.. தமிழ்நாட்டிற்கு வரவேண்டிய ஒப்பந்தம் வரிசையா.. கரெக்ட்டா ஆந்திராவுக்கு போகுது! -
டெல்லியில் இந்தியா கூட்டணி ஆலோசனை.. திமுக, ஆம் ஆத்மி புறக்கணிப்பு.. வைகோ, திருமாவளவன் பங்கேற்பு -
மாதம் 2500 மகளிர் உரிமை தொகை தருவதற்கு தமிழக அரசுக்கு எவ்வளவு பணம் தேவை.. அரசுக்கு மாற்று வழிகள் -
கேஸ் சிலிண்டர் விலை ரூ.1,600.. விலை உயர்வை அறிவித்த கையோடு.. மத்திய அரசு சொன்ன முக்கியமான பாயிண்டு -
மீண்டும் சொதப்பிய திமுக.. திணறுகிறார்களே.. லாவகமாக நர்ரேட்டிவ் செட் செய்த விஜய்.. கவனிச்சீங்களா? -
இன்னும் சில மணி நேரம் தான்.. பூமியை நோக்கி வரும் 'சூரிய புயல்'! மெகா அலர்ட் கொடுத்த நாசா -
மாரிதாஸ் கைது தவறு ஏன்.. உச்ச நீதிமன்றத்தின் இரண்டு பாயிண்டுடன் இன்பத்துரை விளக்கம் -
ஸ்டாலின் உடனே கொடுத்த கிரீன் சிக்னல்.. விஜய்யை மதிமுக துரை வைகோ சந்தித்த அடுத்த நிமிடமே அதிரடி? -
மினி பஸ்சில் லைட்டை ஆப் செய்து.. 45 நிமிடம் அட்டகாசம்! கிளம்பும்போது கோவை ஜோடி எடுத்து சென்ற பொருள்? -
கோவையில் கிழியுது இரட்டை இலை..வேலையைக் காட்டிய வேலுமணி! அழுகையை அடக்க முடியாமல் மா.செ.! ரொம்ப மோசம்! -
கஜானாவை நிரப்ப விஜய் அதிரடி நடவடிக்கை.. டாஸ்மாக் விதித்த கூடுதல் கட்டணம்.. மதுபான விலை உயர்வு? -
ராகுலுக்கு ஷாக் கொடுத்த திமுக! INDIA கூட்டணி தலைவர்களுடன் இடம்பெற்ற பேனர்.. காங். இதை எதிர்பார்க்கல!












Click it and Unblock the Notifications