என்ஜின் கோளாறு- அவசரமாக தரையிறங்கிய ஜெட்லைட் விமானம்: 114 பயணிகள் உயிர் தப்பினர்
Subscribe to Oneindia Tamil

ஜெட்லைட் விமானம் ஒன்று 114 பயணிகளுடன் இன்று காலை 5.47 மணிக்கு மும்பையில் இருந்து மத்திய பிரதேச தலைநகர் போபாலுக்கு கிளம்பியது. ஆனால் வானில் பறக்கையில் என்ஜினில் திடீர் என்று கோளாறு ஏற்பட்டது. இதையடுத்து காலை 6.20 மணிக்கு விமானம் மும்பை விமான நிலையத்தில் அவசரமாக தரையிறக்கப்பட்டது.
விமானத்தில் இருந்த பயணிகள் அதிர்ஷ்டவசமாக உயிர் பிழைத்தனர். என்ஜின் கோளாறு சரி செய்யப்பட்ட பிறகு 10.40 மணிக்கு விமானம் போபாலுக்கு மீண்டும் கிளம்பிச் சென்றது.












Click it and Unblock the Notifications