பிரதமர் பதவிக்கு தகுதியானவர் நிதீஷ்குமர்: சர்ச்சையை கிளப்பிய சத்ருகன் சின்கா

நடிகரும் பாரதீய ஜனதா எம்.பியுமான சத்ருகன் சின்கா இன்று பாட்னா விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது அவர் கூறியதாவது: பீகார் முதல்வர் நிதீஷ் குமார் ஒரு நல்ல மனிதர். நல்ல கொள்கை உள்ள மனிதர்.அவர் முதிரந்த அரசியல்வாதியும் நல்ல மனிதரும் ஆவார். மேலும் பீகார் முதல் மந்திரி நிதீஷ் குமார் பாரதீய ஜனதாவின் பிரதமர் வேட்பாளராக ஆகும் வாய்ப்பு உள்ளது. நிதிஷ் குமார் பிரதமர் பதவிக்கு தகுதியானவர் என்றும் கூறினார். அதேபோல் மோடி எனது அன்புக்கு உரிய தலைவர் புகழ்பெற்ற தேச தலைவர் என்று கூறினார்.
தேசிய ஜனநாயக கூட்டணியில் முறிவு ஏற்பட்டதற்கு ஐக்கிய ஜனதா தளம் காரணம் அல்ல, தற்போது மதச்சார்பின்மை தான் இந்தியாவிற்கு தேவை, எனவே பிரதமர் வேட்பாளருக்கு தகுதியானவர் பீகார் முதல்வர் நிதீஷ் தான் என்றார்.
கடந்த வாரம் சத்ருகன் சின்கா பீகார் முதல் மந்திரி நிதிஷ்குமாரை அவரது இல்லத்தில் சந்தித்து பேசினார் இதனைத் தொடர்ந்தே இவ்வாறு கருத்துக்கூறியுள்ளார். சத்ருகன் சின்காவின் பேச்சிற்கு பா.ஜ. கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. அவருக்கு நோட்டீஸ் அனுப்ப முடிவு செய்துள்ளது.
-
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
கோவை விளாங்குறிச்சி - தண்ணீர் பந்தல் சந்திப்பு மொத்தமாக மாறுகிறது.. மக்களின் ஏக்கம் நிறைவேறுது -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
வைகை அணையை இப்படி ஒரு கோலத்தில் தேனி பார்த்தது இல்லை.. மீன்களே வாழ முடியாத நிலை -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில்












Click it and Unblock the Notifications