திஹார் ஜெயில் எப்.எம்லருந்து பேசுறோம்.. உங்களுக்குப் பிடிச்ச பாட்டு போடுறோம் கேளுங்க!
டெல்லி: திஹார் சிறைக்கு மேலும் ஒரு புதுவரவாக அங்கு எப்.எம். ரேடியோ தொடங்கப்பட்டுள்ளது.
இந்த ரேடியோ நிலையத்தை முற்றிலும் கைதிகளே பொறுப்பேற்று நடத்துகின்றனர். ரேடியோ ஜாக்கி உள்ளிட்ட அனைத்து வேலைகளையும் அவர்களே கவனித்துக் கொள்ளவுள்ளனர்.
எத்தனையோ மறுமலர்ச்சிகளைக் கண்டு விட்ட திஹார் சிறைக்கு இது மேலும் ஒரு புது வரவாக அமைந்துள்ளது.

தொடங்கி வைத்தார் விமலா
இந்த புதிய ரேடியோ நிலையத்தை சிறை வளாகத்திற்குள் சிறைத்துறை இயக்குநர் ஜெனரல் விமலா மேஹ்ரா தொடங்கி வைத்தார்.

டிஜே எப்.எம். ரேடியோ
இந்த ரேடியோவுக்கு டிஜே எப்.எம். ரேடியோ என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது.

சிறை எண் 4ல் ஸ்டுடியோ
திஹார் சிறை வளாகத்தில் உள்ள 4ம் எண் சிறையில்தான் இந்த ரேடியோ நிலையத்தின் ஸ்டுடியோ அமைந்துள்ளது.

பொழுதுபோக்கு பிளஸ் பயிற்சி
இந்த ரேடியோ நிலையத்தில் கைதிகளே ஜாக்கிகளாக செயல்படுவார்கள். அவர்களுக்கும் இது ஒரு நல்ல பொழுதுபோக்காக இருக்கும். அதேசமயம் தொழில் கற்றுக் கொள்ளும் பயிற்சியாகவும் இது அமையும் என்றார் விமலா மேஹ்ரா.

முன்னாடியே பாட்டைச் சொல்லுங்கப்பா
கைதிகளுக்கு ஏதாவது பிடித்த பாட்டு இருந்தால் அதை முன்கூட்டியே சொன்னால் அதை ஒலிபரப்புவார்கள்.
அது சரி.. பாட்டு போடுறாங்களேன்னு நிறையப் பேர் கைதியாக உள்ளே வந்து விடப் போகிறார்கள்...!












Click it and Unblock the Notifications