For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ஆந்திராவில் இந்திராவுக்கு பெட்ரோல், ராஜிவ் காந்திக்கு சம்மட்டி, சோனியாவுக்கு செருப்பு!

By Mathi
Google Oneindia Tamil News

சித்தூர்: தெலுங்கானா தனி மாநிலம் உருவாக்கியதால் கடலோர ஆந்திரா மற்றும் ராயலசீமா பகுதிகளில் காங்கிரஸ் கட்சிக்கு எதிராக வன்முறைகள் வெடித்துள்ளன.

தெலுங்கானாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து எஞ்சி ஆந்திர பிரதேச காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த அமைச்சர்கள், எம்.பி., எம்.எல்.ஏக்கள் ராஜினாமா செய்வது தொடர் கதையாகி வருகிறது. எஞ்சிய ஆந்திராவில் காங்கிரஸ் கட்சியின் எதிர்காலம் கேள்விக்குறியாகவும் இருக்கிறது.

குறிப்பாக ராயலசீமா பகுதியில் பொதுமக்கள் கொந்தளிப்புடன் இருக்கின்றனர். அத்துடன் அகன்ற ராயலசீமா தனி மாநிலத்தை அமைத்து கர்நூலை தலைநகராக்க வேண்டும் என்பதில் முனைப்பு காட்டுகின்றனர்.

கோபத்தில் வெளிப்பட்ட போராட்டங்கள்

கோபத்தில் வெளிப்பட்ட போராட்டங்கள்

அப்பகுதி மக்களின் கோபத்தின் வெளிப்பாடு குறித்த படங்கள் வெளியாகியுள்ளன. அவைதான் இந்த மூன்று படங்கள்...

இந்திராவுக்கு பெட்ரோல்

இந்திராவுக்கு பெட்ரோல்

ஜெகன் மோகன் ரெட்டியின் கோட்டையாக கருதப்படுகிற கடப்பாவில் ஒருங்கிணைந்த ஆந்திராவை வலியுறுத்தியும் தெலுங்கானாவுக்கு எதிர்ப்பு தெரிவித்தும் நேற்று போராட்டம் நடைபெற்றது. அப்போது இந்திரா காந்தி சிலை மீது பெட்ரோல் ஊற்றி எரித்து அப்புறப்படுத்துகின்றனர் திருவாளர் பொதுஜனங்கள்.

ராஜிவ்-க்கு சம்மட்டி

ராஜிவ்-க்கு சம்மட்டி

கர்நூலில் தெலுங்கானாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து நேற்று நடைபெற்ற போராட்டத்தின் போது கடப்பாரை, சம்மட்டி சகிதம் ராஜிவ் காந்தி சிலையை உடைத்துக் கொண்டிருக்கிறார் திருவாளர் பொதுஜனம்

சோனியாவுக்கு செருப்பு

சோனியாவுக்கு செருப்பு

இது சித்தூரில் நேற்று நடைபெற்ற போராட்டத்தின் ஒரு காட்சி. சோனியாவின் உருவ பொம்மையை கீழே போட்டு செருப்புக் காலில் மிதித்தும் செருப்பைக் கழற்றி அடித்தும் தங்களது கோபத்தை வெளிப்படுதுகின்றனர் பொதுமக்கள்,

English summary
Women activist, with an effigy of AICC President Sonia Gandhi, protest against creation of Telangana, in Chittoor on Thursday
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X