ஆந்திராவை பிரிக்கக் கூடாது: சோனியாவுக்கு முதல்வர் கிரண்குமார் ரெட்டி கடிதம்!

Subscribe to Oneindia Tamil

Don't divide Andhra Pradesh, Chief Minister Kiran Reddy writes to Sonia Gandhi
ஹைதராபாத்: தெலுங்கானாவை தடுக்கும் கடைசி கட்ட முயற்சியாக காங்கிரஸ் தலைவர் சோனியாவுக்கு ஆந்திர முதல்வர் கிரண்குமார் ரெட்டி கடிதம் அனுப்பி வைத்திருக்கிறார்.

ஆந்திரா பிரிக்கப்பட்டு தெலுங்கானா உருவாக்கப்படும் என்றும் ஹைதராபாத் 10 ஆண்டுகாலத்துக்கு பொதுதலைநகராக இருக்கும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. தெலுங்கானா தனி மாநிலத்தை உருவாக்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டும் வருகின்றன.

இதற்கு கடலோர ஆந்திரா, ராயலசீமா பகுதிகளில் கடும் எதிர்ப்பு தெரிவித்து போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் தமது கடைசி கட்ட முயற்சிகால சோனியாவுக்கு முதல்வர் கிரண்குமார் ரெட்டி ஒரு கடிதம் ஒன்றை அனுப்பி வைத்திருக்கிறார்.

அதில், ஆந்திரா ஒருங்கிணைந்தே இருக்க வேண்டும்.. கடலோர ஆந்திரா, ராயலசீமா பகுதி மக்களின் கோரிக்கைகளைக் கேட்க காங்கிரஸ் கட்சியால் இருநபர் கமிட்டி அமைக்கப்பட்டது. அக்கமிட்டி தமது நடவடிக்கைகளைத் தொடங்கவே இல்லை. ஆனால் அதற்கு முன்பாகவே தெலுங்கானாவை உருவாக்கக் கூடாது என்று வலியுறுத்தப்பட்டுள்ளது.

இந்தக் கடிதத்தில் கடலோர ஆந்திரா மற்றும் ராயலசீமா பகுதி காங்கிரஸ் தலைவர்களும் கையெழுத்திட்டுள்ளனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+