ஆறுகளில் மணல் அள்ள இனி சுற்றுச்சூழல் அனுமதி தேவை: தேசிய பசுமை தீர்ப்பாயம்
டெல்லி: நாடு முழுவதிலும் உள்ள ஆறுகளில் மணல் எடுப்பதற்கு தடை விதித்து தேசிய பசுமை தீர்ப்பாயம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. மாநில சுற்றுச்சூழல் துறையின் முன் அனுமதியின்றி இனி மணல் அள்ளக்கூடாது எனவும் புதிய கட்டுப்பாடு விதித்துள்ளது.
மணல் அள்ளுவது தேசிய முக்கியத்துவம் பொருந்திய பிரச்னை" என அத்தீர்ப்பாயம் மேலும் கூறியுள்ளது. இனிமேல், சுற்றுச்சூழல் அனுமதி பெறாமல் எந்தவொரு இடத்திலும் மணல் அள்ள உரிமம் தரக் கூடாது என்று உத்தரவிட்ட நீதிபதிகள், அனைத்து மாநில தலைமைச் செயலாளர்களுக்கும் நோட்டீஸ் அனுப்பவும் ஆணையிட்டனர்.
மேலும் மாநில சுற்றுச்சூழல் துறையின் முன் அனுமதியின்றி எந்த ஆற்றிலும் மணல் அள்ளக்கூடாது. மணல் அள்ளும் விவகாரம் குறித்து ஆகஸ்ட்.14ம் தேதிக்குள் அனைத்து மாநில தலைமை செயலர்களும் பதில் தர வேண்டும் எனவும் உத்தரவிட்டனர்.
ஆறுகளில் மணல் முறைகேடாக அள்ளுவது தேசிய முக்கியத்துவம் வாய்ந்த பிரச்னை என்று நீதிபதிகள் கூறியுள்ளனர். உத்தரபிரதேசத்தில் மணல் கொள்ளைக்கும்பலுக்கு எதிராக நடவடிக்கை எடுத்த ஐ.ஏ.எஸ். அதிகாரி துர்கா சக்தி நாக்பால் சஸ்பெண்ட் செய்யப்பட்ட விவகாரம் நாடுமுழுவதும் விஸ்வரூபம் எடுத்துள்ள நிலையில், தேசிய பசுமை தீர்ப்பாயம் இந்த அதிரடி உத்தரவினை பிறப்பித்துள்ளது .
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications