இலங்கை கஇலங்கை கடற்படையால் நாகை மீனவர்கள் சிறை பிடிப்பு- மீனவர்கள் தொடர் வேலை நிறுத்தம்
நாகப்பட்டிணம்: இலங்கையில் சிறைவைக்கப்பட்டுள்ள தமிழக மீனவர்களை விடுதலை செய்ய கோரி மீனவர்கள் தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர். இதை தொடர்ந்து மீனவ பெண்கள் சார்பில் 10ம் தேதி ஆர்பாட்டம் நடக்கிறது.
நாகை மாவட்ட மீனவர்கள் 5 விசைப்படகுகளிலும், காரைக்கால் மீனவர்கள் 4 விசைப்படகுகளிலும் என மொத்தம் 9 விசைப்படகுகளில் மீன் பிடிக்க தென்கிழக்கு பகுதி நடுகடலுக்கு சென்றனர். இலங்கை கடற்படையினர் 9 விசைப்படகுகளையும், 65 மீனவர்களையும் கைது செய்து இலங்கைக்கு கூட்டி சென்றனர். இதில் 41 பேர் நாகையை சேர்ந்தவர்கள், 24 பேர் காரைக்காலை சேர்ந்தவர்கள் ஆவர். இவர்களில் 34 பேர் யாழ்பாணம் சிறையிலும், 31 பேர் திரிகோணமலை சிறையிலும் அடைக்கப்பட்டு உள்ளனர்.
இந்நிலையில் அவர்கள் அனைவரையும் விடுவிக்க கோரி மீனவர்கள் தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர். சுமார் 10 ஆயிரம் மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்க செல்லவில்லை. 1500 விசைப்படகுகளும், 3 ஆயிரம் பைபர் படகுகளும் நாகை கடுகையாற்றில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன.
இதை தொடர்ந்து வருகிற 10ம்.தேதி மீனவ பெண்கள் சார்பில் விசைப்படகுகளில் கருப்பு கொடி கட்டி கடற்கரையில் வரிசையாக மறியல் போராட்டம் நடத்துவது என முடிவு செய்யப்பட்டுள்ளது.
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications