For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

மணிப்பூரை முடக்கும் முழு அடைப்பு அழைப்புகள்!

By Mathi
Google Oneindia Tamil News

இம்பால்: மணிப்பூரில் நாகா இனமக்களும் குக்கி இன மக்களும் தனித்தனியே விடுத்திருக்கும் முழு அடைப்பு போராட்ட அழைப்புகளால் அம்மாநிலமே முடங்கும் நிலை உருவாகி உள்ளது.

மணிப்பூரில் நாகா இனத்தவர் வாழும் பகுதிகளை நாகாலாந்துடன் இணைக்க வேண்டும் அல்லது மாற்று ஏற்பாடு செய்ய வேண்டும் என்பது ஐக்கிய நாகா கவுன்சில் அமைப்பின் கோரிக்கை. இதற்காக ஆகஸ்ட் 11-ந் தேதி முதல் 48 மணி நேர முழு அடைப்புக்கு அந்த அமைப்பு அழைத்து விடுத்துள்ளது.

தெலுங்கானாவைப் போல மணிப்பூரில் குக்கி இன மக்கள் வாழும் பகுதிகளை ஒருங்கிணைத்து குக்கிலாந்து உருவாக்க வேண்டும் என்பது குக்கி மாநில கூட்டுக் குழுவின் கோரிக்கை. இதற்காக ஆகஸ்ட் 13-ந் தேதி நள்ளிரவு முதல் 48 மணி நேர முழு அடைப்புக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருக்கிறது.

இரு தனித்தனியான முழு அடைப்புகளால் அங்கு பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் பாதிக்கப்படும் நிலைமை உருவாகியுள்ளது.

English summary
United Naga Council (UNC), a Naga social organisation, has called a 48-hour Manipur bandh from August 11 to press for their demand of 'an alternative (administrative) arrangement' in Manipur. On the other hand, Kuki State Demand Committee announced a 48-hour bandh at all Kuki-inhabited areas in Manipur from midnight of August 13 next to press for creation of a 'Kukiland' by breaking the 22, 327 Sq Kms of Manipur.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X